குழந்தைகளுக்கான ஹெல்த் டிரிங்ஸில் அதிக அளவு சர்க்கரைதான் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அதை நீண்ட நாள்களுக்கு உட்கொள்ளும்போது, நாளடைவில் குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகளுக்கு உணவை ஊட்ட பெற்றோர் படாதபாடு பட வேண்டியுள்ளது. அதுவே ஹெல்த் டிரிங்ஸ் என்றால், குழந்தைகளே கேட்டு வாங்கிக் குடித்துவிடுவார்கள். மேலும், அந்தப் பவுடரை அப்படியே உண்ணும் பழக்கமும் பல குழந்தைகளிடம் காணப்படுகிறது. அதை உட்கொள்ளும்போது மீண்டும் மீண்டும் உண்ண வேண்டும் என்ற எண்ணத்தை அது உருவாக்கிவிடுகிறது.