ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட நியூயார்க்கைச் சேர்ந்த பெண் ஒருவர், தொப்புள் கொடி ரத்தத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஸ்டெம்செல் மாற்று சிகிச்சை மூலமாக ஹெச்.ஐ.வி-யிலிருந்து குணமடைந்திருக்கிறார் என ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது குறித்த மருத்துவ அறிக்கை `Journal Cell’ என்ற இதழில் வெளியாகி உள்ளது. அதில், `2017ல் இருந்து இதுவரை இப்பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி பாதிப்பு இல்லை. அதோடு எந்த மருந்துகளையும் உட்கொள்ளவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.