ஹர்பஜன் சிங்கின் சாதனையை நெருங்கும் அஸ்வின்

Share

புதுடெல்லி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள ஹர்பஜன் சிங்கின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் நெருங்க உள்ளார்.

36 வயதான அஸ்வின், இதுவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். அந்த அணிக்கு எதிராக அதிக விக்கெட்கள் வீழ்த்திய இந்திய வீரர்களின் பட்டியலில் அனில் கும்ப்ளே(111) முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்ததாக ஹர்பஜன் சிங் ( 95) உள்ளார். ஹர்பஜன் சிங்கின் சாதனையை தற்போது அஸ்வின் நெருங்க உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மோத உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் 9-ம் தேதி நாக்பூரில் தொடங்குகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com