முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களையும், கேம்ரூன் க்ரீன் 52 ரன்களையும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சு தரப்பில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும், சஹால், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர். இந்நிலயில், ட்விட்டரில் ஸ்மித் அவுட்டாகி வெளியேறும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, அரபிக்குத்து என்ற பெயரில் ஹேஷ்டேக் ஒன்றும் டிரெண்ட் ஆகி வருகிறது:
சஹால் வீசிய 10ஆவது ஓவரில், தினேஷ் கார்த்திக்கின் அபார ஸ்டெம்பிங்கால் ஸ்மித் 9 (10) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது, ஆஸ்திரேலியா 84 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து திணறி வந்தது.
ஸ்மித் அவுட்டாகி பெவிலியனுக்கு நடந்துசென்றபோது, நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த அரபிக்குத்து பாடல் ஒலிக்கப்பட்டது.
ஸ்மித் அவுட்டானதால் உற்சாகத்தில் இருந்த இந்திய ரசிகர்கள், அரபிக்குத்து பாடல் மைதானத்தில் ஒலித்தவுடன் ரசிகர்கள் திருவிழாக் கொண்டாட்ட மனோபாவத்தில் ஆட்டம் பாட்டம் என்று குதித்துக் கொண்டாடினர்.
பிற்பாடு இந்திய அணி சூரியகுமார் யாதவ், விராட் கோலியின் அதிரடியில் வெற்றி பெற்று தொடரை 2-1 என்று கைப்பற்றி 2022-ல் அதிக டி20 சர்வதேசப் போட்டிகளில் வென்ற சாதனையையும் நிகழ்த்தியது.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.