ஸ்டெராய்டுகள் ஆபத்தானவையா; யார், எப்படி பயன்படுத்த வேண்டும்? மருத்துவ விளக்கம்! | Are steroids dangerous – Medical explainer

Share

“ஸ்டெரொய்ட்ஸை என்பது உடலில் இயற்கையாக சுரக்கும் ஹார்மோன், மற்றும் அந்த ஹார்மோன்கள் போலச் செயல்பட உருவாக்கப்படும் மருந்துகள் என இரண்டையும் குறிக்கும். ஆட்டோ இம்யூன் நோய் (Auto immune disease), ஆஸ்துமா, ருமட்டாய்டு, லூப்பர்ஸ் போன்ற பாதிப்புகளுக்கான சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தக் கூடிய ஸ்டெராய்ட்ஸ் மருந்துகள் ஒரு வகை. மற்றொரு வகை ஆண்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் போன்ற, உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹார்மோன்களைத் தூண்டக்கூடிய, அதன் மூலம் ஆண்களின் தசை வலிமை, விந்து எண்ணிக்கை உள்ளிட்டவற்றை அதிகரிக்கக்கூடிய டிரக்ஸ்.

பொதுவாக Auto immune disease-க்காக உள்ளிட்ட நோய் சிகிச்சைக்காக நாம் பயன்படுத்தும் ஸ்டெராய்டுகள் மருத்துவர்களின் மேற்பார்வையில், அவர்களின் பரிந்துரையின் பெயரில் எடுத்துக்கொள்ளக் கூடிய மருந்துகள். இவற்றை பரிந்துரை செய்யப்பட்ட அளவை விட அதிகமாகப் பயன்படுத்தும்போது, அதன் விளைவாக ரத்தஅழுத்தம், நீரிழிவு நோய் எனப் பல பிரச்னைகள் உடலில் ஏற்பட ஆரம்பிக்கும். டோஸின் அளவை அதிகரிக்க அதிகரிக்க, பிரச்னைகளும் அதிகரிக்கும். இன்னொரு பக்கம், ஸ்டெராய்டுகளை சிகிச்சைக்காகத் தொடர்ந்து எடுத்துவிட்டு திடீரென எடுக்காமல் விட்டாலும் உடலில் பிரச்னைகள் ஏற்படும். எனவே, மருத்துவ ஆலோசனையின் பேரிலேயே முடிவெடுக்க வேண்டும்.

ஸ்டெராய்டுகளை மருத்துவரின் பரிந்துரையின்படி, அவர் குறிப்பிட்ட அளவில் எடுக்கும்பட்சத்தில், இதனால் பெரிதளவில் பிரச்னை ஏற்படாது. அப்படியே ஏதேனும் ஏற்பட்டாலும் அதனை சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியும். இந்த ஸ்டெராய்டுகள் யாரையும் அடிமையாக்காது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com