தேவையான பொருட்கள்
கோதுமை மாவு:160 கிராம்,
வெண்ணெய்: 80 கிராம்,
பால்:75 மில்லி,
பிங்க் புட் கலர்:2 to 3 துளிகள்,
உப்பு:1/4 டீஸ்பூன்,
சர்க்கரை:150 கிராம் (பொடித்தது),
ஸ்டாபெர்ரி எசென்ஸ்:2 டீஸ்பூன்,
ஸ்டாபெர்ரி அரைத்து பொடியாக நறுக்கியது: 2 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர்:1/2 டீஸ்பூன்,
ஸ்டாபெர்ரி பொடியாக நறுக்கியது:6,
முட்டை: வெள்ளை-2,
முட்டை: மஞ்சளுடன்-1.
செய்முறை
ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் கலந்து வைக்கவும். முதலில் வெண்ணெயையும், சர்க்கரையையும் நன்கு அடிக்கவும். (எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு) பின் அதில் எசென்ஸ் மற்றும் முட்டையை சேர்த்து நன்கு அடிக்காமல் மற்றொரு பாத்திரத்தில் அரைத்த ஸ்டாபெர்ரியையும், பாலையையும் கலந்து வைக்கவும். பின் கோதுமை மாவு கலவையை வெண் ணெய் கலவை யில் கொட்டி பாலும், ஸ்டா பெரியையும் கலந்த கலவையை கொண்டு கலக்கி அதில் பிங்க் புட் கலர் சேர்த்து பின் அதில் நறுக்கிய ஸ்டாபெரி துண்டுகளை போட்டு கலக்கி பேப்பர் கப்பில் ஊற்றி வேக வைத்து எடுத்து பின் அதை ஆற வைத்து அலங்கரிக்கவும். மேலே அலங்கரிக்க விப்பிங் கிரீம் (கலர் வேண்டுமெனில் சேர்த்து கொள்ளவும்).