ஷீரடி சாய்பாபா பொன்மொழியைக் குறிப்பிட்டு பிரித்வி ஷா ஆறுதல் – News18 Tamil

Share

அயர்லாந்து தொடருக்கும் பிரிதிவி ஷா இந்திய அணியில் இடம்பெறவில்லை, அப்படி என்ன தவறு செய்தார் பிரித்வி ஷா, பாம்பே லாபியே அவரை கைவிட்டு விட்டதா? என்ற கேள்வியெல்லாம் பலருக்கும் ஏற்படலாம். ஆனால் மனம் தளராத பிரித்வி ஷா ஷீரடி சாய்பாபாவின் மேற்கோளை சுட்டிக்காட்டி இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை மேற்கொண்டு சுய ஆறுதல் அடைந்துள்ளார்.

ஷீரடி சாய்பாபாவின் புகைப்படத்துடன் அவரது பொன்மொழியான, “Don’t give up, your miracle is on the way” என்பதை பதிவிட்டுள்ளார். இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி பெயரெல்லாம் சேர்க்கப்பட்டுள்ளது, இதில் ராகுல் திரிபாதி பாவம், அதுவும் இவருக்கு லெவனில் இடம் கிடைக்குமா என்று தெரியாது.

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் 2022 இல் ஷாவால் பெரிய ஸ்கோரைப் பெற முடியவில்லை, ஆனால் பவர்பிளேயில் அவரது ஸ்ட்ரைக் ரேட் மிக அதிகமாக இருந்தது. ஐபிஎல்லில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடிய 10 போட்டிகளில் ஷா 153 ஸ்டிரைக் ரேட்டில் 283 ரன்கள் எடுத்தார்.

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்துக்கு எதிரான ரஞ்சி டிராபி செமி பைனலில் ஜெய்ஸ்வால் ஒரு ரன் கூட அடிக்காமல் திராவிட் சிஷப் பிள்ளையாக 66 ரன் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்பில் 64 ரன்களை பிரித்வி ஷாவே எடுத்தார். 2 ரன்கள் எக்ஸ்ட்ராஸ்.

ஜெய்ஸ்வால் 54 பந்துகளுக்குப் பிறகு தன் முதல் ரன்னை எடுத்தார் அது பவுண்டரியானது, மும்பை ஓய்வறையே எழுந்து நின்று கைத்தட்டியது. ஜெய்ஸ்வாலும் காமெடியாக மட்டையை தூக்கி அதை ஏற்றுக் கொண்டார்.

யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுடனான தனது வழக்கத்துக்கு மாறான தொடக்க ரன் கூட்டணிக்குப் பிறகு வேறு ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டார் பிரித்வி ஷா. அதில் ஹாலிவுட் படம் ‘அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்’ புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். ஆனால் இதன் அர்த்தம் என்னவென்று யாருக்கும் புரியவில்லை.

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com