ஷாஹின் அப்ரீடி 4 விக். -பாகிஸ்தானின் சாதாரண பந்து வீச்சில் இலங்கை சுருண்டது

Share

கடும் பொருளாதார நெருக்கடியிலும் கிரிக்கெட் எப்படி நடக்கிறது, அதை பார்க்க எப்படி மக்கள் வருகிறார்கள் என்ற புரியாத புதிரினூடே ஆஸ்திரேலியா தொடரை இலங்கை 1-1 என்று ட்ரா செய்ய இன்று பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இலங்கை 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை கேப்டன் கருண ரத்னே டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், மிகவும் மட்டையான முதல் நாள் பிட்ச். இதிலும் கருண ரத்னே 1 ரன்னில் ஷாஹின் அஃப்ரீடியின் பந்தை மட்டையில் வாங்கி ஸ்டம்பில் விட்டுக் கொண்டு பவுல்டு ஆகி வெளியேறினார்.

அதன் பிறகு குசல் மெண்டிஸ் (21), ஒஷாதா பெர்னாண்டோ (35) இணைந்து 49 ரன்கள் கூட்டணி அமைத்து ஸ்கோரை 60க்குக் கொண்டு சென்ற போது தவறாக கொஞ்சம் ஃபுல் லெந்தில் வந்த பந்தை, அவ்வளவு ரூம் கிடைக்காத பந்தை கட் செய்ய முயன்று யாசிர் ஷாவிடம் ஆட்டமிழந்தார், ரிஸ்வான் கேட்ச். பிறகு 2 பந்துகள் சென்று ஒஷாதா பெர்னாண்டோவும் வெளியே சென்ற ஆடாமல் விட வேண்டிய பந்தை எட்ஜ் செய்து விக்கெட் கீப்பர் ரிஸ்வான் கேட்சுக்கு வெளியேறினார். 60/3.

அஞ்சேலோ மேத்யூஸ் இறங்கினார், அவரை 15 பந்துகள் கட்டிப்போட்டு சிங்கிள் கூட எடுக்க விடாமல் டைட் செய்ய கடைசியில் டக்கிலேயே ஸ்பின்னர் யாசிர் ஷா பந்தை தூக்கி அடிக்கப் போய் கையில் கொடுத்து விட்டுச் சென்றார். 68/4.

தினேஷ் சண்டிமாலுக்கு தனஞ்ஜய டிசில்வா (14) 31 ரன்கள் ஸ்டேண்டு கொடுத்தார் ஆனால் இவரும் ஷாஹின் அப்ரீடியின் கவர் ட்ரைவ் பவுண்டரி பந்தை தளர்வாக ஆடி ஸ்டம்பில் வாங்கி விட்டுக்கொண்டு பவுல்டு ஆனார். 99/5. நிரோஷன் டிக்வெல்லாவை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் குத்தி இழுத்தார் ஷாஹின் அப்ரீடி, தொட்டார் கெட்டர், கல்லியில் கேட்ச் ஆகி வெளியேறினார். 103/6. ரமேஷ் மெண்டிஸ் 11, இடது கை ஸ்பின்னர் ஜெயசூரியா 3 ஆகியோர் முறையே நசீம் ஷா மற்றும் முகமது நவாஸிடம் வெளியேறினார்கள், 9வது விக்கெட்டாக அபாரமாக ஆடிய தினேஷ் சண்டிமால் 115 பந்துகளில் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஹசன் அலி பந்தை பிரமாதமாக வலுவாக அடித்தார், ஆனால் கவரில் யாசிர் ஷா டைவ் அடித்து அட்டகாசமாக கேட்ச் எடுத்து வீட்டுக்கு அனுப்பினார் 177/9.

சிஎஸ்கே வீரர் தீக்‌ஷணா அபாரமாக பேட் செய்து 4 பவுண்டரி 1 சிக்சருடன் 38 ரன்கள் எடுக்க, எதிர்முனை டெய்ல் எண்டர் ரஜிதாவுக்கு டீப் ஸ்கொயர்லெக்கில் ஹசன் அலி கையில் வந்த கேட்சை தரையில் விட்டார். இவர் 12 நாட் அவுட், தீக்சனா விக்கெட்டை ஷாஹின் அப்ரீடி வீழ்த்தி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கை முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு சுருண்டது. இன்று இன்னமும் குறைந்தது 10 ஓவர்கள் மீதமிருக்க பாகிஸ்தான் விக்கெட் இழப்பின்றி 12.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com