ஷபூர்ஜி சக்லத்வாலா: டாடா செல்வந்த குடும்பத்தின் வாரிசு ஒரு கம்யூனிஸ்டாக மாறியது எப்படி?

Share

ஷபூர்ஜி சக்லத்வாலா, டாடா குழுமம்

பட மூலாதாரம், Picryl

படக்குறிப்பு, ஷபூர்ஜி சக்லத்வாலா

  • எழுதியவர், செரிலன் மோல்லன்
  • பதவி, பிபிசி நியூஸ், மும்பை

‘ஷபூர்ஜி சக்லத்வாலா’ என்ற மனிதரின் பெயர் பெரும்பாலான மக்களுக்குப் பரிச்சயமில்லாமல் இருக்கலாம். ஆனால் இந்தியாவின் பெரும் செல்வமிக்க டாடா குடும்பத்தின் உறுப்பினரான இவரைப் பற்றிச் சொல்ல நிறைய கதைகள் உள்ளன.

ஷபூர்ஜி சக்லத்வாலாவின் வாழ்க்கை பல்வேறு திருப்பங்களைக் கொண்டது. அவரது வாழ்க்கை தொடர்ச்சியான போராட்டம் மற்றும் விடாமுயற்சியால் நிறைந்திருந்தது. எந்தச் சூழலிலும் அவர் தனது வசதியான உறவினர்களின் குடும்பப் பெயரையோ, அவர்களது செல்வாக்கையோ பயன்படுத்திக் கொள்ளவில்லை.

அந்தக் குடும்ப உறுப்பினர்களைப் போல, உலகின் மிகப்பெரிய வணிக ஜாம்பவான்களில் ஒன்றாக உள்ள டாடா குழுமத்தை நிர்வகிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருந்ததில்லை. அவர் அந்தப் போட்டிக்கும் வரவில்லை.

அதற்குப் பதிலாக அவர் ஒரு செல்வாக்குமிக்க அரசியல்வாதியாக உருவெடுத்தார். இந்தியாவில் காலனித்துவ ஆதிக்கம் செய்த பிரிட்டிஷ் அரசின் மையமான பிரிட்டன் நாடாளுமன்றத்தில், இந்திய சுதந்திரத்திற்காக அவர் பேசினார். இதில் அவர் மகாத்மா காந்தியுடன் கூட மோதினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com