அதன் பின்னர் காவல் துறையினர் தலையிட்டு விசாரணை மேற்கொண்டதில், இந்த அழைப்பு தொலைபேசி எண் தெரியாத ஒரு அழைப்பு என்றும் இது மோசடி அழைப்பு என்றும் கண்டறிந்தனர்.
கடைசியில் போலீசார் புஷ்பலதாவை கண்டுபிடித்தபோது அவர் பலவீனமாக இருந்ததாகவும் இத்தனை நாட்களுக்குப் பிறகும் மோசடி செய்பவர்கள் நல்லவர்கள் என்றும் அவர் உறுதியாக இருப்பதாக காவல்துறையின தெரிவித்தனர்.
அவருக்கு எவ்வளவு ஆலோசனைகள் வழங்கினாலும் அவரால் எதார்த்தத்தை ஜீரணிக்க முடியவில்லை என்று காவல்துறையினர் கூறியிருந்தனர்.
“அவர் கிராமவாசிகளிடமும் உறவினர்களிடமும் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். ஏன் என்று நாங்கள் கேட்டபோது, அவர் ஒரு உறவினருக்கு உதவுவதாகக் கூறினார். ஒரு முறை, என் மகளின் தொலைபேசியைப் பயன்படுத்தி பணம் கூட அனுப்பினார். நாங்கள் அவளை நிறுத்தும்படி கெஞ்சினோம்” என்று புஷ்பலாதாவின் மைத்துனி NDTV-யிடம் கூறியிருக்கிறார்.
போலீசார் தற்போது சைபர் தடயங்களை கண்காணித்து வருகின்றனர், இந்த மோசடி வெளிநாட்டு ஐ பி முகவரியில் இருந்து தொடங்கியதாகவும், விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.