நம்முடைய உடல் ஆரோக்கியமாக மற்றும் சிறப்பாக செயல்பட நாம் தினசரி எடுத்து கொள்ளும் உணவுகளின் மூலம் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்குள் செல்கின்றன. நமக்கு தேவையான முக்கியமான வைட்டமின்களில் ஒன்று வைட்டமின் பி. இது எட்டு ஊட்டச்சத்துக்களின் குழு ஆகும். இவை ஒவ்வொன்றும் நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் தனித்துவமான பங்கை கொண்டுள்ளன.
Vitamin B என்பவை நம்முடைய செல் ஆரோக்கியத்தை பராமரிக்க, நம்மை உற்சாகமாக வைத்திருக்க மிகவும் முக்கியமானவை. தவிர நம் உடலில் உள்ள நொதிகள் தங்கள் வேலைகளை சரியாக செய்ய மற்றும் உடல் முழுவதும் ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்வது போன்ற பரந்த அளவிலான cellular functions-களுக்கு Vitamin B முக்கியமானதாக இருக்கிறது. நமது மூளையை ஒழுங்காக இயங்க வைப்பதிலும் Vitamin B-க்கு முக்கிய பங்கு உண்டு.

B குரூப் வைட்டமின்கள் நம்முடைய உடலுக்கு ஆற்றலைத் தரும் ஊட்டச்சத்துக்களை (கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் போன்றவற்றை) எரிபொருளாக பயன்படுத்த உதவுகின்றன. தியாமின் (B1), ரிபோஃப்ளேவின் (B2), நியாசின் (B3), பாந்தோத்தேனிக் ஆசிட் (B5), பைரிடாக்சின் (B6), பயோட்டின் (B7), ஃபோலேட் (B9), கோபாலமின் (B12) உள்ளிட்ட 8 பி வைட்டமின்கள் இருக்கின்றன. ஒருவருக்கு வைட்டமின் பி குறைபாடு இருப்பதை வெளிப்படுத்தும் 7 அறிகுறிகள் பற்றி தற்போது பார்க்கலாம்.
- வைட்டமின் பி குறைபாடு இருப்பது ஒருவரை அடிக்கடி சோர்வடைய செய்வதோடு, எனர்ஜி லெவல் குறைவதற்கு காரணமாக இருக்கிறது.
- வைட்டமின் பி குறைபாடு காரணமாக ஒருவருக்கு தசை பலவீனம் மற்றும் மோசமான muscle coordination உள்ளிட்ட சிக்கல்கள் காணப்படும்.
- இந்த வைட்டமின் பி குறைபாட்டினால் ஏற்படும் அனீமியா அதாவது ரத்த சோகை, ஒருவரின் தோலை pale அல்லது மஞ்சள் நிறமாக மாற்ற கூடும்.
- இந்த வைட்டமின் குறைபாடு இருப்பது ஒருவருக்கு உணர்விழப்பு (Numbness) , tingling மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- அடிக்கடி எரிச்சலடைவது, டிப்ரஷனாகவே காணப்படுவது மற்றும் மூட் ஸ்விங்ஸ் போண்டா மனநலன் சார்ந்த பிரச்சனைகள் வைட்டமின் பி குறைபாட்டுடன் தொடர்புடையவையாக குறிப்பிடப்படுகிறது.
- வைட்டமின் பி குறைபாடு காரணமாக வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சினைகள் ஏற்படுகிறது.
- அதே போல முகப்பரு, ரேஷஸ் மற்றும் சரும வறட்சி போன்ற தோல் பிரச்சனைகள் வைட்டமின் பி குறைபாட்டுடன் தொடர்புடையவை என்கிறார்கள் நிபுணர்கள்.
Also Read | வைட்டமின் D3 மற்றும் B12 ஏன் உடலுக்கு மிகவும் அவசியம்..? அவை எந்தெந்த உணவுகளில் நிறைந்துள்ளன..?
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பி வைட்டமின்கள் உள்ள சில ஆரோக்கியமான உணவுகள்:
முட்டை, பால், யோகர்ட், பீஃப், சூரியகாந்தி விதைகள், சிட்ரஸ் பழங்கள், பச்சையிலை காய்கறிகள், அவகேடோ, விலங்குகளின் கல்லீரல்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.