வேலூர்: வேலூர் அருகே போலி சாதிச்சான்று கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர் கல்பனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தோளப்பள்ளி ஊராட்சிமன்றத் தலைவர் கல்பனா மீது பட்டியலினத்தவர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உட்பட 7 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. பட்டியலினத்தருவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஊராட்சித்தலைவர் பதவிக்கு மாற்று சமூகத்தை சேர்ந்த கல்பனா போட்டியிட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
வேலூர் அருகே போலி சாதிச்சான்று கொடுத்து தேர்தலில் வெற்றிபெற்ற ஊராட்சிமன்றத் தலைவர்மீது வழக்குப்பதிவு
Share