கோவிட் தொற்றின் பாதிப்பிலிருந்து பல நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், தற்போது புதிய நோய்த் தொற்று ஒன்று பரவி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.
‘குரங்கு காய்ச்சல்’ (Monkeypox) எனப்படும் இந்த வைரஸ் தொற்றால் ஐரோப்பாவில் 100 நபர்களுக்கும் மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் ஏற்பட்ட மிகப்பெரிய தொற்று வெடிப்பாக இது கருதப்படுகிறது. வேகமாகப் பரவி வரும் இந்தத் தொற்று குறித்து விசாரிக்க உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமையன்று உடனடியாக அவசர கூட்டத்தைக் கூட்டியுள்ளது.
பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின், ஸ்வீடன், இங்கிலாந்து உள்ளிட்ட ஒன்பது நாடுகளில் மிகப்பெரிய அளவில் இந்தத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதோடு அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவிலும் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பதிவாகி உள்ளது.