ஐஸ்கிரீம்.. ஐஸ்கிரீம் அப்படின்னு சொன்னாலே வாயில் எச்சில் ஊரும்… ஏன்னா அந்த அளவுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் ரொம்பவே விரும்பி உண்ணுவாங்க.
அப்படிப்பட்ட ஐஸ்கிரீம்ல எந்த ஒரு ரசாயனமும் கலக்காம இயற்கையான முறையில் நம்ம மதுரையில கிடைக்கும் அப்படின்னு சொன்னா உங்களால நம்ப முடியுமா? ஆமாங்க நம்ம மதுரை பெரியார் பேரு நிலையம் பக்கத்துல ஃப்ரூட் ஸ்டிக் அப்படின்ற ஒரு கடை இருக்கு. இந்த கடையில தான் எந்த ஒரு ரசாயனமும் கலக்காம பழங்களை கொண்டு அதாவது நாவல் பழம், கொய்யா, சப்போட்டா, அத்தி, வாழைப்பழம் போன்ற 40 வகையான பழங்களை கொண்ட ஐஸ்கிரீமை சேல்ஸ் பண்ணிட்டு இருக்காங்களாம்…
கடந்த 23 வருடங்களுக்கு முன்புதள்ளு வண்டியில ஐஸ்கிரீம் விற்பனை பண்ணிக்கிட்டு இருந்த நாகேந்திர குமார் தனது தம்பியுடன் சேர்ந்து பின்பு நாளடைவில் குல்பி வாலா ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இப்படி அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஐஸ்கிரீமை ஆரோக்கியமான முறையிலும் குறைந்த விலையிலும் அடித்தட்டு மக்களும் வாங்கி சாப்பிடக்கூடிய வகையில்தற்பொழுது வெறும் பழங்களை வைத்து அதாவது வாழை கொய்யா மாங்காய் மாம்பழம், நாவல் பழம் அத்தி சப்போட்டா என பல்வேறு வகையான பழங்களை கொண்டு எந்த ஒரு ரசாயன பொருட்களை கலக்காமல் வெறும் சர்க்கரை பால், பழம் போன்றவற்றை பயன்படுத்தி 40 வகையான ஐஸ்கிரீம்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறார்.

மேலும் கொடைக்கானலில் இருந்து கிடைக்கக்கூடிய லிச்சி என்ற பழத்தை வைத்து லிச்சி ஐஸ்கிரீமும், இளநீர் மூலமாக தயாரிக்க கூடிய இளநீர் ஐஸ்கிரீம், இனிப்புகளில் குலோப்ஜாம் மற்றும் ரசகுல்லா போன்ற அனைத்து வகையான ஐஸ்கிரீம்களை வெறும் இருபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
வெறும் தள்ளுவண்டி கடையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஃப்ரூட் ஸ்டிக் கடை தற்போது ஏழு பிரான்செஸ் கொண்டு மதுரையில் விற்பனை செய்யப்படுகின்றது. ஐஸ்கிரீம் என்றாலே சளி காய்ச்சல் த்ரோட் இன்பெக்சன் என்று ஐஸ்கிரீம் விரும்பிகள் கூட தள்ளி வைக்கக் கூடிய நிலையில் தற்பொழுது ஆரோக்கியமான ஐஸ்கிரீம் என்ற வகையில் எந்த ஒரு ரசாயனமின்றி இயற்கையான முறையில் தயாரிக்க கூடிய இந்த ஐஸ்கிரீம்க்கு மதுரை மக்களிடையே நல்ல வரவேற்பும் பெற்று வருகின்றது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.