பாரம்பரிய உணவான சிறுதானியத்தில் கஞ்சி, கூழ் போன்ற உணவுகளை நாம் சாப்பிட்டு இருப்போம் ஆனால் சிறு தானியத்தில் இனிப்பு வகையான ஸ்வீட்டான லட்டுவை சாப்பிட்டு இருக்கின்றீர்களா?
நம்ம மதுரையில் கம்பு, கேப்பை ,மாப்பிள்ளை சம்பா ,பாசிப்பயிறு போன்ற சிறுதானியத்தில் ஆரோக்கியமான முறையில் நெய் ,நாட்டு சக்கரை போன்றவற்றை பயன்படுத்தி வெறும் பத்து ரூபாய்க்கு லட்டு விற்பனை செய்து கொண்டிருக்கின்றார்கள்.
இது குறித்து கடை உரிமையாளர் பிரசன்னா கூறும் போது, சிறுதானியத்தில் இனிப்பு வகையான லட்டு ஹெல்த் மிக்ஸ் மாவு வகை போன்றவற்றை ஹோம் மேட் மூலமாக கடந்த ஏழு வருடங்களாக விற்பனை செய்து கொண்டிருக்கின்றோம். கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு தான் மதுரை சிம்மக்கல் பகுதியில் இருக்கக்கூடிய சொக்கநாதர் கோவில் அதாவது பழைய மீனாட்சி கோவில் அருகில் சுவி சிறுதானிய லட்டு கடை என்ற கடையை திறந்திருக்கின்றோம்.
உங்கள் நகரத்திலிருந்து(மதுரை)
இங்கு நாங்கள் 16 வகையான சிறு தானிய லட்டுக்களை விற்பனை செய்கின்றோம் எங்கள் சிறுதானிய லட்டுக்கு தனித்துவம் என்னவென்று சொன்னால் வனஸ்பதி, டால்டா போன்றவற்றை பயன்படுத்தாமல் வெறும், நெய் ,நாட்டு சக்கரை கொண்டுதான் லட்டுகளை சுத்தமான மற்றும் ஆரோக்கியமான முறையில் தயாரித்து வருகின்றோம். இதை குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரைக்கும் ஆரோக்கியமான சிறுதானிய லட்டுகளை விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் கலர் கலரான ஃபுட் ப்ஃபாயில் பேப்பர் மூலமாக ராப் செய்து வெறும் பத்து ரூபாய்க்கு விற்பனை செய்து கொண்டிருக்கின்றோம்.
எங்களிடம் என்ன வகையான சிறுதானிய லட்டுகள் இருக்கின்றது என்று பார்த்தீர்கள் என்றால், நிலக்கடலை லட்டு, இதில் நெய் மற்றும் மூக்கு இல்லாத கடலை வெல்லம் கொண்டு தயாரிக்கின்றோம் இதில் தேவையில்லாத கொலஸ்ட்ராலிற்கு எந்த ஒரு இடமும் இல்லை அந்த அளவிற்கு ஆரோக்கியமானது.
16 வகையான சிறு தானியங்களை நன்றாக வறுத்து எடுத்து அதை நன்றாக அரைத்து எடுத்து அதில் சிறுதானிய லட்டும், கருப்பு உளுந்தை மற்றும் பாசி பயிரை நன்றாக சுத்தம் செய்து அதனை வறுத்தெடுத்து இரண்டு முறை நன்றாக அரைத்து எடுத்து அதில் கருப்பு உளுந்து லட்டும், பாசிப்பயறு லட்டும் செய்யப்படுகின்றன.

எலும்பு, மூட்டு போன்றவை சத்தாக இருக்கக்கூடிய வகையில் கம்பை சுத்தம் செய்து நன்றாக அரைத்து எடுத்து வெறும் நாட்டு சர்க்கரையை மற்றும் பயன்படுத்தி அதில் கம்புலட்டும், பாரம்பரியமான சிறு தானியமான திணையில் திணை லட்டும், சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லதான கேப்பையில் கேப்பை லட்டும், பாசி பயறு போன்றே பாசிப்பருப்பை காயவைத்து நன்றாக அரைத்து அதில் சுவையான முறையில் தயாரிக்கப்படும் பாசிப்பருப்பு லட்டு என சிறுதானியத்திலேயே ஆரோக்கியமான முறையில் தயாரித்து வெறும் பத்து ரூபாய் விற்பனை செய்து வருகின்றோம்.
இதுபோக நாங்கள் தயாரிக்க கூடிய லட்டுயில் மிகவும் அற்புதமான லட்டுகளான மாப்பிள்ளை சம்பா லட்டு, கருப்பு கவுனி லட்டு மற்றும் டேட்ஸ் லட்டு.
அந்த காலத்தில் கல்யாணம் ஆன மகன்களுக்கு மாப்பிள்ளை சம்பா லட்டை தருவார்களாம் அந்த வகையில் மாப்பிள்ளை சம்பாவை நன்றாக சுத்தம் செய்து அரைத்து அதில் நெய் நாட்டு சக்கரை மற்றும் முந்திரி கிஸ்மிஸ் போன்றவற்றை பயன்படுத்தி மாப்பிள்ளை சம்பா லட்டை தயார் செய்கின்றோம். இதனை கல்யாணம் ஆகக்கூடிய மணமகன்களுக்கு அனைவரும் வாங்கி செல்கின்றார்கள். இந்த லட்டுகள் மற்றும் நமது கடையில் 15 இல் இருந்து 25 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கின்றோம் ஏனென்றால் இந்தப் பொருட்களின் விலைக்கு ஏற்றார் போல் விலை நிர்ணயித்துள்ளோம்.
இதுபோக சிறுதானியத்தில் ஹெல்த் மிக்ஸ், கம்பு கேப்பையில் மாவு வகை இவற்றை தோசை மாவாகவும் அல்லது மோருடன் கலந்து கூழ் ஆகவும் சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். இவற்றை 20 ரூபாயிலிருந்து விற்பனை செய்கின்றோம் என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.