வெடிவிபத்து நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: கே.எஸ் அழகிரி வலியுறுத்தல்

Share

சென்னை: ‘‘வெடி விபத்துகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’’ என கே.எஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து கே. எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையில்: காஞ்சிபுரம் அடுத்த குருவிமலையில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக இறந்திருக்கிறார்கள். 17 பேர் உடல் பாகங்கள் சிதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்கள். முறையான அனுமதி பெற்றிருந்தாலும் பட்டாசு ஆலையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகள் செய்துத் தரப்படுவதில்லை. வெடி விபத்தில் பலியான தொழிலாளர்களுக்கு தமிழக முதலமைச்சர் தலா ரூபாய் 3 லட்சம் நிவாரணம் வழங்கி ஆணை பிறப்பித்திருக்கிறார். அதேபோல, காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு நிவாரண உதவிகள் செய்கிற அதேநேரத்தில் இத்தகைய வெடி விபத்துகள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com