*இன்ஸ்டன்ட் மோர் குழம்பு
வெட்டித் தயிர் -இரண்டு கப்
(நன்கு கடைந்து கொள்ளவும்)
கடலை மாவு -4 டீஸ்பூன்
கடுகு, மிளகு ,சீரகம் -தலா கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் -தலா கால் டீஸ்பூன் பச்சை மிளகாய்- 2 (மிகவும் பொடியாக நறுக்கியது) கறிவேப்பிலை ,மல்லி தழை -சிறிதளவு
உப்பு, எண்ணெய் -தேவையான அளவு.
செய்முறை
அரைக்கப் நீரில் கடலை மாவு +உப்பு +மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கரைத்து கடைந்து வைத்துள்ள தயிருடன் கலந்து வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு ,மிளகு, சீரகம், பெருங்காயம் ,கருவேப்பிலை தாளித்து தயிர் கரைசலை சேர்த்து இரண்டு கொதி வந்ததும் இறக்கி பொடியாக நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.
(தொட்டுக்கொள்ள கோஸ் + கடலைப்பருப்பு வறுவல்/மாங்காய் இஞ்சி தொக்கு அருமையாக இருக்கும்)
*வேர்க்கடலைப் பொடி
வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை- இரண்டு கப் காய்ந்த மிளகாய்- 15
பூண்டு- 10பல்
உப்பு தேவையான அளவு.
செய்முறை
காய்ந்த மிளகாய் வெறும் வாணலியில் மிதமான தீயில் வறுத்து எடுத்து ( ஆறியதும் )அதனுடன் மற்ற பொருட்களை கலந்து நைசாக அரைத்து எடுக்கவும்.
இந்த வேர்க்கடலை பொடியில் நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட சுவையாக இருக்கும்.
(இதற்கு தொட்டுக்கொள்ள வத்தல் பப்படம் இருந்தால் போதும்.)