
வீட்டில் எவ்வளவுதான் ருசியாகச் சமைத்தாலும் கோயிலில் தரப்படும் பிரசாதத்துக்குத் தனிச்சுவை உண்டு. சிறியதே அழகு என்பதுபோல் கொஞ்சமாகத் தரப்படுவதாலோ என்னவோ அதன் சுவை ஈடு இணையில்லாததாக இருக்கும். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு பிரசாதம் பிரசித்தமாக இருக்கும். வட இந்தியாவில் பூரி ஜெகநாதர் கோயிலுக்கும் அப்படிப் பிரசித்தமான பிரசாதங்கள் நிறைய உண்டு.
அங்கே தினமும் 100 வகையான நைவேத்யங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆறு கால பூஜையின்போது அவை படையலிடப்படு கின்றன. ஜெகநாதரைத் தரிசித்த தோடு அங்கு படையலிடப்படும் நிவேதனங்களின் செய்முறை யையும் அறிந்துகொண்டு வந்திருக்கிறார் சென்னை வாசகி ராஜகுமாரி. “கோயிலின் சுவையை முழுவதுமாக வீட்டில் பெற முடியாது என்றாலும் முயன்று பார்க்கலாமே” என்று சொல்லும் அவர், அவற்றில் சிலவற்றைச் சமைக்கக் கற்றுத்தருகிறார். ஜெகநாதர் கோயிலில் எண்ணெய்க்குப் பதில் நெய்யைத்தான் பயன்படுத்து கிறார்கள். கறிவேப்பி லையைப் பயன்படுத்துவதில்லை.