விவேகானந்தர் 40 வயதில் மரணமடைய என்ன காரணம்? தனது மரணம் குறித்து முன்பே கூறினரா?

Share

முக்கிய சாராம்சம்

  • விவேகானந்தர் பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்
  • அவர் வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, அவர் பிரெஞ்சு சமையல் கலைக்களஞ்சியத்தை தவணைகளில் வாங்கினார்.
  • அவர் ஆட்டுப்பால் குடித்து வந்தார். கொய்யா அவருக்கு மிகவும் பிடித்த பழம் மற்றும் ஐஸ்கிரீம் அவரது பலவீனமாக இருந்தது.
  • அவர் பெரிய மாஸ்டர்களிடம் பாரம்பரிய இசைப் பயிற்சி பெற்று பல இசைக்கருவிகளை வாசித்தார்.
  • அவர் சில நாட்கள் பெருநகர கல்வி அமைப்பில் ஆசிரியர் பணி செய்தார்.
  • சில சமயம் தன்னைத் தானே கேலி செய்து கொண்டு தன்னை ‘மோட்டா சுவாமி'(குண்டு சுவாமி) என்று அழைத்துக் கொள்வார்.
  • அவருக்கு நன்றாக உறக்கம் வராது. கடுமையாக முயற்சித்தும் ஒரு நேரத்தில் அவரால் 15 நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியாது.
  • ஒருமுறை அவர் ரயிலில் பயணம் செய்தபோது ​​ஒரு சிறிய ஸ்டேஷனில் ரயில் நிற்கவில்லை. அவரை பார்ப்பதற்காக மக்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து ரயிலை வலுக்கட்டாயமாக நிறுத்தினார்கள்.
  • அவருக்கு விலங்குகள் வளர்ப்பதில் விருப்பம் இருந்தது. அவரது நாய் ‘பாகா’ மடத்தின் உள்ளே கங்கை நதிக்கரையில் அடக்கம் செய்யப்பட்டது.
  • ஒருமுறை வைத்தியர் தண்ணீர் குடிப்பதையும் உப்பு சாப்பிடுவதையும் தடை செய்தபோது, ​​அவர் 21 நாட்களுக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்கவில்லை.
விவேகானந்தர்

பட மூலாதாரம், RUPA & COMPANY

சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையை மாற்றியதில் ‘ரஷோகுல்லா'(ரசகுல்லா)வுக்கு பெரும்பங்கு உண்டு என்று யாருக்காவது தெரியுமா? சுவாமி விவேகானந்தர் சிறுவயதில் இருந்தே சாப்பிடுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

‘Swami Vivekananda the Feasting, Fasting Monk’ அதாவது ‘சுவாமி விவேகானந்தர் விருந்து மற்றும் உண்ணாவிரத துறவி’, இது அவரது வாழ்க்கை வரலாற்றின் பெயர். ஆனால் இதன் தலைப்பு வெறுமனே வைக்கப்படவில்லை.

வேதங்கள் மற்றும் வேதாந்தம் பற்றிய புத்தகங்களை வாங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அவர் பிரெஞ்சு சமையல் கலைக்களஞ்சியத்தை தவணைகளில் வாங்கினார் என்பதிலிருந்தே அவருக்கு உணவின் மீதிருந்த ஆர்வத்தை அளவிட முடியும்.

உலகிலுள்ள எல்லா பழங்களிலும் அவர் கொய்யாவை மிகவும் விரும்பினார். இது தவிர, சர்க்கரை மற்றும் ஐஸ் கலந்த மென்மையான தேங்காயைச் சாப்பிடவும் அவர் விரும்பினார். காந்திஜியை போலவே அவரும் ஆட்டுப்பால் குடித்தார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com