`விவாகரத்தான மனைவியின் உடைமைகள் கணவனுக்குச் சொந்தமில்லை’ – கர்நாடக உயர் நீதிமன்றம்! |Wife’s property does not belong to husband after divorce says Karnataka Court

Share

கணவன் மற்றும் மனைவிக்கு இடையே திருமணம் ரத்தான பிறகு, மனைவிக்குச் சொந்தமான பொருள்களை, கணவன் வைத்திருக்க முடியாது என, கர்நாடக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு நடைபெற்ற வழக்குதாரரின் திருமணத்தின்போது, பெண் வீட்டார் தரப்பில் இருந்து, பெண்ணுக்காக வரதட்சணையாக சுமார் 9 லட்ச ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் திருமணம் ரத்தானதைத் தொடர்ந்து, வரதட்சணையாகக் கொடுக்கப்பட்ட அந்தத் தொகையை, 9 சதவிகித வட்டியோடு திரும்பத் தருமாறு, மும்பையில் வசித்து வரும் கணவரின் மீது, அவரின் முன்னாள் மனைவி பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தொடுத்துள்ளார்.

சித்திரிப்பு படம்

சித்திரிப்பு படம்
Image by Engin Akyurt from Pixabay

கடந்த 2009-ம் ஆண்டில், தன் மாமியார் மற்றும் கணவர் மீது வழக்குத் தொடர்ந்ததையடுத்து, 2018-ம் ஆண்டில் இப்பெண்ணுக்கு சாதகமாக விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. விவாகரத்தின் போது, தன் மனைவிக்கு ஏற்கெனவே 4 லட்ச ரூபாயை ஜீவனாம்சமாக அளித்ததாகத் தெரிவித்து, பெண்ணின் முன்னாள் கணவர் கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி உள்ளார்.

இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நாகபிரசன்னா, பெண்ணுக்கு பெற்றோரால் வழங்கப்பட்ட 9 லட்ச ரூபாய், ஜீவனாம்ச தொகையில் இருந்து வேறுபட்டது. “மனைவி கொண்டு வந்த அனைத்து உடமைகளையும், விவாகரத்துக்குப் பின், கணவரின் குடும்பத்தினர் வைத்திருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com