அதன்படி, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சுகந்தன் தலைமையிலான குழுவினர், நேற்று முண்டியம்பாக்கம் மருத்துவமனை பகுதிகளிலுள்ள சில உணவகங்களில் ஆய்வுசெய்வதற்காகச் சென்றிருந்தனர். அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை அறிந்த ஓர் உணவக தரப்பினர், உணவக வாயிலை தார்பாலினால் மூடிவிட்டு உள்ளே பதுங்கிக்கொண்டிருந்திருக்கின்றனர். இதையறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், தார்பாலின்களை விலக்கிவிட்டு, மதில் சுவர்மீது ஏறிக் குதித்து, உணவுப் பொருள்களை ஆய்வுசெய்தனர்.
அப்போது, அந்த உணவகத்தில் உணவுப் பொருள்கள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. இதேபோல் மற்றோர் உணவகத்திலும் இருந்திருக்கிறது. எனவே, அந்த இரண்டு உணவகங்களுக்கும் தலா 5,000 அபராதம் விதித்தோடு… `இனி சுகாதாரமான முறையில் உணவுப் பொருள்களைத் தயாரிக்க வேண்டும். இல்லையேல், ஹோட்டலுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரிக்கை விடுத்துச் சென்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY