
ஷபிர் பாஷா விலகல்: ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எப்சி அணியின் துணை பயிற்சியாளராக நீண்டகாலமாக பணியாற்றி வந்த ஷபிர் பாஷா விலகியுள்ளார்.
இந்திய அணியின் முன்கள வீரரான ஷபிர் பாஷா கடந்த 2016-ம் ஆண்டு துணை பயிற்சியாளராக சென்னையின் எப்சி அணியில் இணைந்தார்.
கடந்த 8 ஆண்டுகளாக சென்னையின் எப்சி அணியின் செயல் திறனில் முக்கிய பங்கு வகித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4 ஆட்டங்களுக்கு இடைக்கால பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இவர் பணியாற்றிய காலத்தில் 2017-18-ம் ஆண்டு சீசனில் சென்னையின் எப்சி அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது.