ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பகல் 1 மணி வரை 44.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவரை 49,470 ஆண்கள், 51,649 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இதுவரை ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். பகல் ஒரு மணி வரை 1,01,392 பேர் வாக்களித்துள்ளனர். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கருங்கல்பாளையம் உள்ளிட்ட சில வாக்குச்சாவடிகளில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாகியுள்ளது.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள் கூட்டம் கூட்டமாக வாக்களித்து வருகின்றனர். பகல் 1 மணி நிலவரப்படி ஆண்களைவிட 2,000 பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலைவிட கூடுதல் வாக்குகள் பதிவாகும் என தகவல் வெளியாகியுள்ளது. 2021 சட்டமன்ற தேர்தலில் 66 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தற்போதைய வாக்குப்பதிவு வேகம் தொடர்ந்தால் 80 சதவீதத்தை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்குப்பதிவு நிலவரம்:
காலை 9 மணி நிலவரம்: 10.10 சதவீதம் வாக்குகள் பதிவு
காலை 11 மணி நிலவரம் : 27.89 சதவீதம் வாக்குகள் பதிவு
பகல் 1 மணி நிலவரம்: 44.56 சதவீதம் வாக்குகள் பதிவு