விருதுநகரில் ஃபேமஸாகும் அப்பத்தா கடை பற்றி இந்த செய்திகுறிப்பில் பார்க்கலாம்.
விருதுநகரை சேர்ந்தவர்கள் ஜமுனா ராணி மற்றும் சுகன்யா. நெருங்கிய தோழிகளான இவர்கள் நட்பையும் தாண்டி தொழில் செய்து தனிமுத்திரை பதிக்க முடிவு செய்து இருவரும் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக வீட்டில் இருந்த படியே, சிறுசிறு தொழில்கள் செய்து வந்தனர்.
இந்நிலையில், தான் தாங்கள் சிறுவயதில் உண்டு மகிழ்ந்த பாரம்பரிய உணவுகளான குழிப்பனியாரம், கேப்பை ரொட்டி, பால் கொலுக்கட்டை போன்ற பொருட்களை விற்பனை செய்யலாம் முடிவு செய்து அப்பத்தா கடை என்ற பெயரில் சிறிய கடை ஒன்றை தற்போது மதுரை சாலையில் ஈஷா சூப்பர் மார்க்கெட் அருகில் நடத்தி வருகின்றனர்.
பாரம்பரிய உணவு வகைகளை விற்கும் தோழிகள்
மாலை நேரத்தில் மட்டும் கடை நடத்தி வருவதால் மதியம் முதலே தயாரிப்பு பணிகளை ஆளுக்கொரு வேலையாக பிரித்துக்கொண்டு, களைப்பு தெரியாமல் இருக்க மகிழ்ச்சியாக பேசி சிரித்தபடி வேலையை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க : ‘மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அனீமியா’.. அறிகுறிகள் இது தான்!
இதுகுறித்து பேசிய ஜமுனா ராணி, “பாரம்பரிய உணவுகளை இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் செல்லலாம் என்ற நோக்கில் ஒரு சிறிய முயற்சியாக தான் இதை தொடங்கினோம். ஆனால் மக்கள் இதற்கு கொடுத்த வரவேற்பு இதை விடாமல் எங்களை செய்ய வைக்கிறது” என்றார்.
இடையில் குறுக்கிட்ட சுகன்யா, “4 மணிக்கு கடையை திறந்தாலே ஒரு மணிநேரத்தில் பெரும்பாலான பொருட்கள் விற்றுவிடும், இப்போதைக்கு குழிப்பனியாரம், கேப்பை ரொட்டி, பால் கொலுக்கட்டை, இளநீர் அல்வா போன்ற சில பொருட்களை செய்து வருகிறோம். இதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து கடையை இன்னும் விரிவு படுத்தும் எண்ணத்தில் இருக்கிறது” என தெரிவித்தார்.
அதற்கு முதலில் வேலை செய்யனும் என்று சுகன்யா ஜமூனாவை பார்த்து சொல்ல, ஜமூனா முறைத்து பார்த்தார். இருவரும் ஒருவரை பார்த்து கொண்டிருந்த நேரத்தில் திடீரென இருவரும் சிரிக்க அந்த இடமே கலகலப்பானது. பொதுவாகவே 2 நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அங்கு வேலை நடக்கிறதோ, இல்லையோ மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. அதுபோல தான் இங்கேயும் என்று தோன்றியது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.