“விராட் கோலிதான் என் கைகளை அழுத்தமாகப் பிடித்து மோதலில் ஈடுபட்டார்”- நவீன் உல் ஹக் |Naveen ul haq says Virat Kohli grabbed my hand forcefully.

Share

ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னரும் நவீன் உல் ஹக்கை, விராட் கோலி கோஷம் பின் தொடர்ந்தது. இந்நிலையில் விராட் கோலியுடனான மோதல் குறித்து நவீன் உல் ஹக் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ நான் சண்டையைத் தொடங்கவில்லை.என் மீது எந்தத் தவறும் இல்லை. போட்டிக்குப் பின் கைகுலுக்கிக் கொண்டபோது, விராட் கோலி தான் சண்டையை தொடங்கினார்.

நவீன் உல் ஹக், விராட் கோலி

நவீன் உல் ஹக், விராட் கோலி

ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல விரும்புகிறேன். நான் யாரையும் ஸ்லெட்ஜிங் செய்ய மாட்டேன். பௌலிங் செய்யும் போதும் சரி, பேட்டிங் செய்யும் போதும் சரி, எனது கோபத்தை நான் வெளிப்படுத்தவே இல்லை. அங்கு இருந்த வீரர்களுக்குத் தெரியும் , நான் எப்படி சூழ்நிலையை சமாளித்தேன் என்று. அந்த போட்டிக்கு பிறகு விராட் கோலிதான் என் கைகளை அழுத்தமாக பிடித்து மோதலில் ஈடுபட்டார்.  நானும் ஒரு மனிதன் என்பதால் திருப்பி எதிர்வினை ஆற்றினேன். 

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com