விம்பிள்டன் டென்னிஸ்: அரை இறுதியில் சானியா ஜோடி | Wimbledon tennis: Sania Mirza-Mate Pavic Reach Mixed Doubles Semi-finals

Share

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது.

லண்டனில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6-4, 6-2, 7-6(6) என்ற நேர் செட்டில் 25-ம் நிலை வீரரான நெதர்லாந்தின் போடிக் வான் டி சாண்ட் ஸ்கால்ஃபை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வதுசுற்றில் 18-ம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-1, 6-2 என்ற நேர் செட்டில் 4-ம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் பவுலா படோசோவை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, குரோஷியாவின் மேட் பாவிச் ஜோடி, கனடாவின் கேப்ரியலா டப்ரோவ்ஸ்கி, ஆஸ்திரேலியாவின் ஜான் பீர்ஸ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சானியா ஜோடி 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com