விபி-ஜி ஆர்ஏஎம் ஜி சட்டத்தால் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பாதிக்கப்படுமா?

Share

'விபி-ஜி ஆர்ஏஎம் ஜி' சட்டத்தால் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பாதிக்கப்படுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள விபி-ஜி ஆர்ஏஎம் ஜி திட்டத்தால் தமிழ்நாட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் பாதிக்கப்படும் என்ற கவலை எழுந்துள்ளது. ஊரக வேலை திட்டப் பணியாளர்களை மாநில அரசின் திட்டத்திற்கு பயன்படுத்த முடியாத சூழல் இதனால் உருவாகியுள்ளது என விமர்சனம் எழுந்துள்ளது. இந்த விமர்சனம் எழுவது ஏன்?

கடந்த 20 ஆண்டுகளாக அமலில் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிக்கும் திட்டத்தை (MGNREGA) மாற்றுவதற்கான புதிய மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு ‘வளர்ச்சியடைந்த இந்தியா – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமம்) 2025’, அதாவது ‘விபி-ஜி ஆர்ஏஎம் ஜி’ (VB-G RAM G) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்த மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு டிசம்பர் 21-ஆம் தேதி ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டமானது.

இதற்கு பாஜகவின் கூட்டணி கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com