அவனோட அம்மா சொன்ன மாதிரி கம்பி மேல விழுந்தா, கம்பி சரியா சிறுநீர்ப்பாதைக்குள்ள போகாது. அம்மாவை ஏமாத்தலாம்… டாக்டரை ஏமாத்த முடியுமா..? அப்புறம் கம்பியை கவனமா வெளியே எடுத்து, சிகிச்சை கொடுத்து அனுப்பி வைச்சேன்.
இன்னொரு சம்பவம். இருபதுகள்ல இருக்கிற இளைஞர்கள் சிலர் செக்ஸ் வொர்க்கர்ஸை தேடிப் போயிருக்காங்க. விறைப்புத் தன்மை குறையாக இருக்கிறதுக்காக ஆணுறுப்புக்குள்ள பிளாஸ்டிக் குச்சியை சொருகிக்கிட்டு டிரை பண்ணியிருக்காங்க. ஓர் இளைஞனைத் தவிர்த்து மற்ற எல்லாரும் அதைக் கவனமா வெளியே எடுத்துட்டாங்க. ஆனா, ஒருத்தனுக்கு ரொம்ப ஆழமா உள்ள சிக்கிடுச்சு. கூட போன ஃப்ரெண்ட்ஸ் தூக்கிட்டு ஓடிவந்தாங்க. மயக்க மருந்து கொடுத்து வெளியே எடுத்தேன்.
பெண்கள்கூட காய்கறிகளைப் பயன்படுத்தி பெண்ணுறுப்புல மாட்டிக்கிட்டு எமர்ஜென்சி வார்டுக்கு வர்றாங்க. அப்போதைக்கு அவங்களோட பிரச்னையை சரி செஞ்சு அனுப்புறேன்னாலும், மனதளவுல இது பெண்களுக்கு ரொம்ப கூச்சத்தை ஏற்படுத்தும். ஸோ, ஆணோ, பெண்ணோ இந்த மாதிரி விநோதமான முறைகள்ல சுய இன்பம் செய்யாம இருக்கிறதுதான் நல்லது” என்கிறார் டாக்டர் காமராஜ்.