ஒரு காலத்தில், கதை சொல்லுதல் ஆரோக்கியமான வாழ்க்கையை உணர்த்தியது. “ஆரோக்கியம் பெறுவோம்” என்ற மந்திர முயற்சி அதில் இருந்தது. குழந்தைகள் அவர்களது குடும்பத்தினருடன் ஆரோக்கியத்தை குறித்து பொறுப்பான முறையில் பேசும் அர்ப்பணிப்பு தற்போது டிஸ்னியால் உயிர்ப்பிக்கப்பட்டு உள்ளது.
“ஆரோக்கியம் பெறுவோம்” என்பது வெறும் பரப்புரை அல்ல; அது ஊட்டச்சத்து, சுகாதாரம், உடற்பயிற்சி, மயக்கும் கதைகள் நிறைந்த பயணம். டிஸ்னி ஆரோக்கியமான வாழ்க்கையை ஒரு எளிய கருத்தாக்கமாக மாற்ற விரும்புகிறது. இதை குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் புரிந்துகொண்டு அனுபவிக்க முடியும். இதனை இன்னும் மகிழ்ச்சிகரமானதாக மாற்ற, டிஸ்னி IKEA உடன் இணைந்து ஒரு டிஜிட்டல் தொடரை உருவாக்கி உள்ளது. அதில் உணவின் மீது ஆர்வம் கொண்ட ஒரு சிறுவன் உற்சாகமாக இடம்பெற்றுள்ளார்.
இந்த சிறுவனின் பக்கத்து வீட்டுக்காரர் வேறு யாருமல்ல, சமையல் அறையில் சுவைமிகு தந்திரங்களை நிகழ்த்தும் புகழ்பெற்ற சமையல் கலைஞர் விக்கி ரத்னானி. இவர்கள் சேர்ந்து சிறந்த சமையல் பயணத்தைத் தொடங்கினர். இவர்கள் அன்றாட உணவை சத்தான ஆனால் சுவையான தலைசிறந்த உணவுகளாக மாற்றினர். அதில் இருந்து சிறந்த ஐந்து உணவுகளை உங்களுக்காக எடுத்து வந்துள்ளோம்.
அன்னாசி சல்சாவுடன் டகோஸாக மாற்றப்பட்ட மல்டிகிரேன் ரொட்டிகள்:
சமையல் கலைஞர் விக்கி ஒரு சிறப்பு அன்னாசி சல்சாவை உருவாக்கி, அதை ஒரு மல்டிகிரைன் ரொட்டியில் சமமாக பரப்பி, அதில் புரதம் நிறைந்த ராஜ்மா, சாலட், கொத்தமல்லி ஆகியவற்றை நிரப்பினார். இந்த நன்மைகள் அனைத்தும் ஒரு சத்தான டகோ ஷெல்லில் மூடப்பட்டு பரிமாறப்பட்டது.
வீட்டில் தயாரிக்கப்பட்ட தேங்காய் சட்னியுடன் ஆரோக்கியமான பச்சை பருப்பு ஊத்தப்பம்:
அவர்கள் பச்சை பருப்பு, அரிசி, வெங்காயம், மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு ஆகியவற்றைக் கொண்டு, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த ஒரு மாயாஜால மாவை உருவாக்கினர். அதில் ஊத்தாப்பம் செய்தனர். பின்னர் இந்த ஊத்தாபத்தின் சுவையைப் பூர்த்தி செய்ய, அவர்கள் வதக்கிய காய்கறிகள், புதிதாக துருவிய தேங்காய் சேர்த்து ஒரு சட்னி தயார் செய்தனர்.
சீஸ் ப்ரோக்கோலி சாஸில் கையால் செய்யப்பட்ட பாஸ்தா:
சமையல் கலைஞர் விக்கி மைதா, முட்டையின் மஞ்சள் கருவைப் பயன்படுத்தி வீட்டில் பாஸ்தாவை உருவாக்கினார். பாஸ்தா வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலாப் பொருட்களால் கொண்டு உருவாக்கப்பட்ட சாஸ் சேர்க்கப்பட்டு வெண்ணெயுடன் முழுமையாக சமைக்கப்பட்டது. பின்னர் ஆரோக்கியமான ப்ரோக்கோலி பூக்களால் அலங்கரிக்கப்பட்டது.
கோகோ வாழைப்பழ மில்க் ஷேக்குடன் ஆரோக்கியமான ஓட் குக்கீகள்:
வெண்ணெய்யை உருக்கி, மாவில் ஓட்ஸ், பாதாம் சேர்த்து ஆரோக்கியமான குக்கீகளை தயார் செய்யும் கலவயை உருவாக்கினர். மகிழ்ச்சியான பானத்திற்காக, அவர்கள் ஓட்ஸ், வாழைப்பழங்கள், கோகோ பவுடர், பால் ஆகியவற்றை கலந்து புத்துணர்ச்சியூட்டும் கோகோ வாழைப்பழ மில்க் ஷேக்கை உருவாக்கினர்.
எளிதான கஜார் & பீட்ரூட் அல்வா டார்ட்லெட்டுகள்:
இனிப்புச் சுவை விரும்பிகளை திருப்திப்படுத்த, அவர்கள் கேரட், பீட்ரூட் அல்வாவை தயார் செய்தனர். இதில் சர்க்கரைக்குப் பதிலாக இயற்கையான வெல்லம் சேர்க்கப்பட்டது. மேலும் கலவையானது சிறிய டார்ட்லெட்டுகளில் மென்மையாக வைக்கப்பட்டு, கிரீம் மற்றும் ரோஜா இதழ்களால் முடிசூட்டி அழகுபடுத்தப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…
- First Published :