விசிக முகாம் கூட்டம் – Dinakaran

Share

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே கொளத்தூர் கிராமத்தில் விசிக முகாம் கூட்டம், கிராம முகாம் செயலாளர்கள் தமிழ்பாண்டியன், அருண் ஆகியோர் தலைமையில்  நடைபெற்றது. இதில் பொருளாளர் ஜெ.சுரேஷ் வரவேற்றார்.  முகாமில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் மு.வ.சித்தார்தன், மாநில இளஞ்சிறுத்தைகள் துணை செயலாளர் சுந்தர், மாநில துணை பொருளாளர் கைவண்டூர் செந்தில், திருவலாங்காடு ஒன்றிய செயலாளர் பன்னீர் ஆகியோர் பங்கேற்று சனாதன சக்திகள் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தடுத்து அம்பேத்கர் வழியில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழ உறுதிப்படுத்த இளைஞர்கள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் ஆர்.பப்லு, கேசவன், நகர செயலாளர் ராஜதுரை நிர்வாகிகள் சூரியன், விக்னேஷ், கோபி, அண்ணாதுரை உள்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com