விக்ராந்த் போர் கப்பலில் பிபிசி: பிரமிப்பூட்டும் திறன்கள் – முழு விவரம்

Share

  • ஜுகல் ஆர் புரோஹித்
  • பிபிசி செய்திகள், விமானம் தாங்கி விக்ராந்த் போர்க்கப்பல், கொச்சியில் இருந்து

விக்ராந்த்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

2013இல் தளவாட கட்டுமானத்துக்காக ஒப்படைக்கப்பட்ட விக்ராந்த்

“இந்த கப்பலில் நீங்கள் தனியாக இருந்தால், உங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியுமா?” – கப்பலுக்குள் இருந்த கடற்படை அதிகாரியிடம் நான் கேட்ட முதல் கேள்வி இதுதான்.

“இப்போது என்னால் முடியும். ஆனால் அதற்கான வழிகளைக் கற்றுக் கொள்ள எனக்கு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் பிடித்தன” என்று அந்த அதிகாரி புன்னகையுடன் கூறினார்.

இந்தியா கடற்படை சேவைக்காக தளவாட ஆற்றல்களை கட்டியெழுப்புவதற்காக இந்த கப்பல் வழங்கப்பட்டு 13 ஆண்டுகளாகின்றன. 2022, செப்டம்பர் 2ஆம் தேதி இந்த கப்பல் இந்திய கடற்படை சேவைக்காக அர்ப்பணிக்கப்படுகிறது.

சமஸ்கிருதத்தில் விக்ராந்த் என்றால் ‘துணிச்சலானவர்’ என பொருள்படும். இந்த கப்பலை தேசப் பணியில் அர்ப்பணிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி செப்டம்பர் 2ஆம் தேதி கொச்சி வருகிறார். கட்டுமான நிலையில் இருக்கும் கப்பல், கட்டியெழுப்பப்பட்டு கப்பல் கட்டுமான துறைமுகத்தை கடந்து விட்டால் பிறகு அதை ‘கமிஷன்’ செய்யப்பட புறப்படுவதாக அழைக்கப்படுகிறது.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com