பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. கர்ப்ப காலத்தில் நீரிழிவைக் கட்டுப்படுத்தவில்லையென்றால் அது குழந்தையை பாதிக்கும் அபாயம் இருக்கிறது. கர்ப்ப கால நீரிழிவு டைப் 2 நீரிழிவாக மாறவும் வாய்ப்பிருக்கிறது என்பதால் பெண்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டும்” என்றவர் டைப் 1, டைப் 2 வகை நீரிழிவு குறித்துப் பேசினார்.
“கணையத்தில் இருந்து நம் உடலுக்குத் தேவையான இன்சுலின் சுரக்கிறது. அதன் தேவை என்னவென்றால் நமது செல்களுக்கு உணவாக இருக்கும் குளுக்கோஸில் இன்சுலின் இருந்தால்தான், செல் அதனை ஏற்றுக்கொள்ளும் என்பதுதான் அடிப்படை. நம் உடலில் உள்ள எதிர்ப்பாற்றல் செல்களே கணையத்தில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை எதிர்த்து அழித்து விடுவதால் இன்சுலின் சுரப்பு நின்று போய் விடும். இன்சுலின் கிடைக்காததால் குளுக்கோஸ் செல்களுக்குள் போகாமல் ரத்தத்திலேயே தங்கி விடுவதால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பதே டைப் 1 நீரிழிவு நோய். அதுவே இன்சுலின் உற்பத்தி இருந்தும் அது சரி வர செயலாற்றாத நிலையில் ரத்தத்திலேயே குளுக்கோஸ் தேங்கி விடுவதுவ் டைப் 2 நீரிழிவு நோய் ஆகும். இந்தியாவில் டைப் 1 நீரிழிவு நோய்க்கு ஆட்படுபவர்கள் 10 சதவிகிதம் பேர்தான். மீதம் 90 சதவிகிதம் பேர் டைப் 2 நீரிழிவு நோய்க்குதான் ஆட்படுகின்றனர்.
டைப் 1 நீரிழிவைப் பொறுத்தவரைக்கும் அவர்களுக்கு இன்சுலின் உற்பத்தி தடைப்பட்டு விட்டதால் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கும். டைப் 2 நீரிழிவுக்கு இன்சுலின் உற்பத்தியைச் சீராக்குவதற்கும், அது முறையாகச் செயலாற்றுவதற்கும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். எதையுமே ஆரம்பத்திலேயே கண்டறிந்து விடுவதுதான் சிறந்தது. தாமதமானால் கண், நரம்பு, சிறுநீரகம், இதயம் என பல உறுப்புகளையும் நீரிழிவு பாதிக்க வாய்ப்பிருக்கிறது” என்றவர், டைப் 2 நீரிழிவை மருந்து மாத்திரைகளே இல்லாமல் கட்டுப்படுத்த முடியும் என்கிற ஆராய்ச்சி பற்றி கூறினார்.
“இங்கிலாந்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆராய்ச்சி வெற்றி பெற்றிருக்கிறது. டைப் 2 நீரிழிவு நோய்க்கு ஆட்பட்டு 5 ஆண்டுகளுக்குள் இருப்பவர்கள் இம்முறையைப் பின்பற்றலாம். அதற்கு மேல் இருப்பவர்களுக்கு இது பொருந்தாது. hba1c test என்கிற ஹீமோகுளோபின் பரிசோதனை மூலம் மூன்று மாத ரத்தச்சர்க்கரை அளவின் சராசரி 5.7 என்கிற அளவுக்குள் இருப்பவர்களுக்கே இது பொருந்தும். வாரத்துக்கு 5 நாள்கள் 30 நிமிட நடைப்பயிற்சி மேற்கொண்ட, கார்போஹைட்ரேட் குறைவாகவும் புரதத்தை அதிகமாகவும் எடுத்துக் கொள்ளும் உணவு முறையைப் பின்பற்றினால் மருந்து, மாத்திரைகளின்றியே இவ்வகை நீரிழிவினைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ஏரோபிக் உடற்பயிற்சிகளும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஊட்டச்சத்து நிபுணரின் வழிகாட்டுதல்படி உணவுப்பழக்கத்தை அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். இது போன்ற வாழ்வியலைப் பின்பற்றி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை hba1c பரிசோதனை மேற்கொண்டு வந்தாலே போதும்.
‘Education to protect tomorrow’ என்பதே இந்த ஆண்டு நீரிழிவு தினத்துக்கான கருப்பொருள். நீரிழிவு மட்டுமல்ல எந்த நோயாக இருந்தாலும் வருமுன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சரிவிகித உணவு, போதுமான உடற்பயிற்சி என நமது வாழ்வியலை அமைத்துக் கொள்வது முக்கியம். எந்த நிலையிலும் அலட்சியத்துடன் இருக்கக்கூடாது. உடலின் மாற்றங்களை உணர வேண்டும். உடனுக்குடனே பரிசோதனைகள் செய்து நமது பிரச்னையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் குணப்படுத்துவது எளிது. உடல் நலமும் ஒரு முதலீடுதான். பணத்தைச் சேமிப்பது போல் உடல் ஆரோக்கியத்தைக் காப்பது மிகமிக அவசியம்” என்கிறார் பரணிதரன்.