பூரி சுடுவது சுலபமான வேலைதான் என்றாலும் அதை பதமாக சுட்டு எடுப்பது அனைவருக்கும் வராது. அதேபோல் அதன் சுவையையும் பலராலும் கொண்டு வர முடியாது. அப்படி உங்களுக்கும் பூரி சுவை சுமாராகத்தான் வருகிறது எனில் இந்த வாழைப்பழம் டிப்ஸை டிரை பண்ணி பாருங்க….
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு – 1 1 /2 கப்
வாழைப்பழம் – 1
சர்க்கரை – 2 tsp
தயிர் – 1 tbsp
ஏலக்காய் – 1/2 tsp
எண்ணெய் – தே.அ
உப்பு – தே.அ
ஆப்ப சோடா – 1/4 tbsp
![]()
செய்முறை :
முதலில் ஒரு ஜாரில் வாழைப்பழம், ஏலக்காய், சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.
பின் பாத்திரத்தில் மாவு கொட்டி அதில் உப்பு மற்றும் சேடா மாவு கலந்துகொள்ளுங்கள்.
பின் அரைத்த வாழைப்பழ விழுதை சேர்த்து மாவுக்கு தேவையான தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துகொள்ளுங்கள்.
சிறு சிறு உருண்டைகளாக உறுட்டி பின் திரட்டி எப்போதும் போல் எண்ணெய் காய்ந்ததும் திரட்டிய மாவை போட்டு சுட்டு எடுங்கள்.
பூரி நன்கு உப்பி வரும்.. டேஸ்ட்டும் அருமையாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.