பதுங்கியிருந்த சிறுத்தை, சிறுவனைக் காப்பாற்றிய நாய் – காணொளி
கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுவனுக்கு மிக அருகே படுத்திருந்த சிறுத்தையை, நாய் ஒன்று காட்டிக் கொடுத்ததால் அச்சிறுவன் நூலிழையில் தப்பித்த காட்சி இது.
விளையாடிக் கொண்டிருந்த சிறுவனிடமிருந்து சில அடிதூரத்தில் சிறுத்தை பதுங்கியிருந்தது.சிறுத்தை இருப்பதை சிறுவன் அறியாத நிலையில், அப்போது அருகில் வந்த நாய் சிறுத்தை இருப்பதை உணர்ந்து கொண்டது. நாய் குரைத்ததால் சிறுத்தை புதரை விட்டு வெளியே வந்தது.
சிறுத்தையை கண்ட அச்சிறுவன் உடனேயே ‘அம்மா, சிறுத்தை’ என அலறி ஓடினான். இதன்பின், அச்சிறுத்தை வேறு பக்கமாக ஓடியது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு