உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பயனர்களை கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் மெசேஜிங் செயலி வாட்ஸ் அப். தங்களிடம் இருக்கும் கோடிக் கணக்கான பயனர்களை தக்கவைத்துக் கொள்ளவும், மேலும் பல பயனர்களை ஈர்க்கவும் மெட்டா நிறுவனம் தொடர்ந்து புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
பயனர்களின் சாட்டிங் அனுபவத்தை மேம்படுத்துவதற்காகவே இது போன்ற புதிய அம்சங்களை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் மீண்டும் ஒரு புதிய அம்சத்தை வாட்ஸ்அப்-ல் அறிமுகம் செய்துள்ளது மெட்டா நிறுவனம். அது தான் ஸ்க்ரீன் ஷேரிங் வசதி.
இது வரையில் வீடியோ கான்பிரன்சிங் செய்வதற்காக நாம் ஸ்கைப், கூகுள் மீட், ஜூம் மீட், போன்ற வீடியோ காலிங் ஆப்ஸ்களைத் தான் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இனி வாட்ஸ் அப்-லும் நம்மால் வீடியோ கான்பிரன்சிங் செய்ய முடியும். மெட்டா அறிமுகம் செய்ய உள்ள ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் என்பது, ஒரே நேரத்தில் பலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் போது, அதை ஹோஸ்ட் செய்யும் நபரோ அல்லது வேறு யாரோ தங்களது மொபைல் ஸ்கிரீனையோ அல்லது லேப்டாப் ஸ்கிரீனையோ அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்துகொள்ள முடியும்.
பெரும்பாலும் ஐடி துறை ஊழியர்களுக்கு இந்த ஸ்க்ரீன் ஷேரிங் வசதி மிகவும் அவசியமான ஒரு அம்சம் என்றே சொல்லலாம். அதோடு கொரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பிறகு ஆன்லைன் வகுப்புகள் வெகு சாதாரணமாகிவிட்டது. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தவும் இனி வாட்ஸ்அப் பெரும் உதவியாக இருக்கும்.
இப்போது, வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் சோதனை முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த அம்சம் வந்தால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் யார் வேண்டுமானாலும், வீடியோ கால் மூலம் தங்களது உறவினர்கள் அல்லது நண்பர்கள் உடன் போசும்போது, அவர்களது போனின் ஸ்கிரீனை அனைவருக்கும் தெரியும்படி ஷேர் செய்துகொள்ள முடியும்.
அதேபோல், வாட்ஸ்அப்பில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் வந்த உடன் நீங்கள் வீடியோ கால் செய்யும்போது, கீழே மைக், வீடியோ ஹைட், டிஸ்கனெக்ட் ஆகிய டேப்களுக்கு இடையே ஸ்கிரீன் ஷேரிங் டேப் இடம்பெற்று இருக்கும். அதை கிளிக் செய்த உடன் உங்களது போனின் ஸ்கிரீன் அனைவருக்கும் தெரியும்படி டெலிகாஸ்ட் செய்யப்படும். அதன் பின்பு மீண்டும் அதே ஸ்கிரீன் ஷேரிங் டேப்பை கிளிக் செய்தால், உங்களது ஸ்கிரீன் அவர்களுக்கு தெரியாது.
விரைவில் ஸ்க்ரீன் ஷேரிங் வசதியை வாட்ஸ் அப்-ல் அறிமுகம் செய்ய உள்ளது மெட்டா நிறுவனம். இந்த அம்சம் பயனர்களை வெகுவாக கவரும் என்பதில் சந்தேகமில்லை.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.