உங்கள் அழகான சருமத்தை மேலும் பொலிவாகக் காட்டிட சருமத்தில் இருக்கும் தேவை இல்லாத முடிகளை நீக்குதல் மிகவும் முக்கியமானது. முகம், கை, கால் மற்றும் மென்மையான பாகங்களில் உள்ள தேவை இல்லாத முடிகளை நீக்குவதற்குப் பல வழிகளைப் பின்பற்றி வருகிறார்கள். அவற்றில், பலர் பெரிதும் ஆர்வம் காட்டும் ஒரு வழி- வாக்ஸிங் (Waxing). இதனை எளிமையாக வீட்டிலேயே செய்துகொள்ளலாம். வாக்ஸிங்கில் ஹாட் வாக்ஸ் (Hot Wax) மற்றும் கோல்ட் வாக்ஸ் (Cold Wax) என இருவகைகள் உள்ளன.

வாக்ஸிங் செய்துகொள்வதற்கு முன் பின்பற்ற வேண்டிய ஸ்கின் கேர் ஸ்டெப்ஸ் சில இதோ…
எக்ஸ்ஃபோலியேட் (Exfoliate) – வேக்ஸிங் செய்வதற்கு முன் எக்ஸ்ஃபோலியேட் செய்துகொள்வது தான் முதல் ஸ்டெப். வேக்ஸிங் செய்வதற்கு இரண்டு அல்லது மூன்று நாள்களுக்கு முன்பு சருமத்தின் மேல் இருக்கும் இறந்த செல்களை (Dead Cell) நீக்க வேண்டும். அதற்கு சர்க்கரை, காஃபி ஸ்கிரப்கள், ஆல்ஃபா ஹைட்ராக்ஸி அமிலங்கள், பீட்டா ஹைட்ராக்ஸி அமிலங்கள், சாலிசிலிக் அமிலங்கள் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மாஸ்க், ஓட்மீல் ஸ்கிரப் போன்றவற்றைப் பயன்படுத்தி எளிதாக சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அகற்றலாம். இதன் மூலம், சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்புடனும் காணப்படும்.
மாய்ஸ்ச்சரைஸர் (Moisturizer) – நமது உடலில் ஈரப்பதம் குறையும் போது, சருமத்தில் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதற்கு, இயற்கை உட்பொருள்கள் நிறைந்திருக்கும் மாய்ஸ்ச்சரைஸரை உபயோகப்படுத்தும்போது நம் உடலில் ஈரப்பதம் மேலோங்கி இருக்கும்.
மாய்ஸ்ச்சரைஸர் பயன்படுத்துவதும் சருமத்தின் தன்மைகளைப் பொறுத்து மாறுப்படும். எண்ணெய் வழியும் சருமம் உடையவர்கள் லைட் மாய்ஸ்ச்சரைசர், நார்மல் சருமம் உடையவர்கள் மீடியம் மாய்ஸ்ச்சரைசர் மற்றும் வறண்ட சருமம் உடையவர்கள் ஹெவி மாய்ஸ்ச்சரைசரை பயன்படுத்தலாம்.

புற ஊதாக் கதிரிலிருந்து பாதுகாப்பு (UV Protection) : ஒவ்வொரு நாளும் அலுவலகம் கிளம்பும்போது உங்களது வாட்ச், ஃபோன் போன்ற அடிப்படையான விஷயங்களை மறக்காமல் எடுத்துக்கொள்வது போல உங்கள் சருமத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது அவசியம். இது உங்கள் தோல் ஆரோக்கியத்தை புற ஊதாக் கதிர்களிலிருந்து பாதுக்காக்கிறது. மேலும், வெளிப்புறச் சுற்றுச்சூழல் மாசுபாட்டால் தோலில் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பையும் குறைக்கிறது.
மேற்கூறிய வழிகளைப் பின்பற்றி, சருமத்தை ஆரோக்கியமாகவும், வேக்ஸிங் செய்து பொலிவுடனும் வைத்துக்கொள்ளலாம்.
உடனே, உங்கள் அருகில் இருக்கும் நேச்சுரல்ஸ் சலூனை அணுகவும்.
Whatsapp number 909262626 | Whatsapp link