வருமான வரித்துறையின் நோட்டீஸ்; அதிர்ந்த தினசரி கூலித்தொழிலாளி – வரி பாக்கி எவ்வளவு தெரியுமா? | bihar daily wage earner get notice from income tax dept for pay dues of rs.37.5L

Share

நீங்கள் தினசரி கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்திவருபவர் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு திடீரென ஒரு நாள் வருமான வரித்துறையிலிருந்து, `நீங்கள் வருமான வரித்துறைக்கு லட்சக்கணக்கில் பணம் பாக்கி வைத்திருக்கிறீர்கள்’ என நோட்டீஸ் வந்தால் எப்படியிருக்கும். அதுபோன்ற ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் பீகாரை சேர்ந்த நபர் ஒருவருக்கு நேர்ந்திருக்கிறது.

பீகார் மாநிலத்தில் ககாரியா மாவட்டத்தில் வசிப்பவர் தான், கிரிஷ் யாதவ். இவர் தினசரி கூலி வேலை செய்து வருமானம் ஈட்டி வருகிறார். இவருடைய ஒருநாள் வேலைக்கான கூலியே 500 ரூபாய் தான். இந்நிலையில், வருமான வரித்துறையிலிருந்து இவரின் பெயருக்கு வந்திருக்கும் நோட்டீஸ் ஒன்று இவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை
vikatan

அதாவது அவருக்கு வந்த நோட்டீஸில், கிரிஷ் யாதவ் வருமான வரித்துறையில் ரூ.37.5 லட்சம் பாக்கி வைத்திருப்பதாகவும், அதனை உடனே செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. இதைப் பார்த்ததும் என்ன செய்வதென்று அறியாது திகைத்த கிரிஷ் யாதவ், நேராக தான் வசிக்கும் பகுதிக்குட்பட்ட காவல் நிலையத்தை நாடியுள்ளார். பின்னர் இதுகுறித்து பேசிய அலௌலி காவல் நிலைய அதிகாரி புரேந்திர குமார், “கிரிஷ் பகிர்ந்துகொண்ட தகவலின் அடிப்படையில், நாங்கள் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளோம். இது ஒரு மோசடி வழக்காக தெரிகிறது. மேலும் இதில், கிரிஷ் தனது பெயரில் வழங்கப்பட்ட பான் எண்ணுக்கு எதிராக நோட்டீஸ் பெற்றுள்ளார்” என தெரிவித்தார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com