சென்னை: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: `அதிமுக’ பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, 17.10.2022 அன்று 51வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, வருகிற 17, 20 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்கள், ‘அதிமுக பொன்விழா நிறைவு மற்றும் 51வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்கள்’ கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களிலும் மற்றும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன. நடைபெற உள்ள இடங்கள், சிறப்புரையாற்றுவோர் விவரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.