வனவிலங்கு பூங்காவில் இருந்து தப்பித்து அதிகாரிகளுக்கு போக்கு காட்டிய வரிக் குதிரை
வீட்டை மறந்துவிட்டு தெருக்களில் சுற்றித்திரியும் செல்ல நாய்க்குட்டி போல், காட்டை மறந்து ரோட்டில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வரிக்குதிரையின் பெயர் செரோ.
தென் கொரிய தலைநகர் சோலில் உள்ள சில்ட்ரன்ஸ் கிராண்ட் பார்க் என்ற உயிரியல் பூங்காவில் இருந்து தப்பித்த செரோ, மூன்று மணி நேரம் அதிகாரிகளுக்கு போக்குகாட்டி அங்குமிங்கும் ஓடித்திரிந்தது.
2 வயது வரிக்குதிரை செரோவைப் பிடிக்கும் முயற்சியில் போலீஸார், தீயணைப்புத் துறையினர், உயிரியல் பூங்கா ஊழியர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு ஒரு வழியாக, மயக்க ஊசி செலுத்தி செரோவை பாதுகாப்பாக பிடித்தனர். அதன் பின்னர், செரோ மீண்டும் உயிரியல் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: