வடகிழக்கு பருவ மழை நிறைவு பெறுகிறது- இந்திய வானிலை ஆய்வு மையம்

Share

வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை நடப்பாண்டில் தாமதமாக அக்டோபர் 25ம் தேதி தொடங்கியது. இந்த முறை வடக்கிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்திற்கு சராசரியை விட அதிக மழை கிடைத்தது. காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலம் போன்றவை உருவானதன் காரணமாக ஒருசில மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

தமிழகத்தில் இயல்பை விட 59 சதவீதம் அதிக மழை பதிவாகியுள்ளது. 22 மாவட்டங்களில் மிக அதிக மழையும், 14 மாவட்டங்களில் அதிக மழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக, விழுப்புரத்தில் இயல்பை விட 119 சதவீதமும், திருப்பத்தூரில் 115 சதவீதமும் அதிக மழை பெய்துள்ளது.

அரியலூா், செங்கல்பட்டு, சென்னை, கோயம்புத்தூா், கடலூா், ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூா், நாமக்கல், பெரம்பலூா், ராணிப்பேட்டை, தென்காசி, தேனி, திருநெல்வேலி, திருப்பத்தூா், திருவள்ளூா், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, வேலூா், விழுப்புரம் ஆகிய 22 மாவட்டங்களில் மிக அதிக மழையும் தருமபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி, புதுக்கோட்டை, சேலம், தஞ்சாவூா், சிவகங்கை, திருப்பூா், திருவாரூா், தூத்துக்குடி, விருதுநகா் ஆகிய 14 மாவட்டங்களில் அதிக மழையும் பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: கோவையில் 5 நாட்களாக தண்ணி காட்டிய சிறுத்தை கூண்டில் சிக்கியது…

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை இன்னும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுவை, காரைக்கால், அதனை ஒட்டிய கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளா பகுதிகளில் இருந்து விலகுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

ஜம்மு- காஷ்மீர், லடாக், இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com