வங்கதேசம்: ஷேக் ஹசீனாவுக்கு அரசியல் புகலிடம் தரப்படுமா? இந்தியா முன்னுள்ள 3 வழிகள்

Share

வங்கதேசம், ஷேக் ஹசீனா, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மூன்று வாரங்களுக்கும் மேலாக இந்தியாவில் தங்கியுள்ளார்

  • எழுதியவர், ஷுப்ஜ்யோதி கோஷ்
  • பதவி, பிபிசி நியூஸ் பங்களா, டெல்லி

கடந்த மாதம் ஐந்தாம் தேதி வரை வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியா வந்து மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகிறது.

அவரும் அவரது தங்கை ஷேக் ரெஹானாவும் தங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மிகவும் ரகசியமாகவும், பலத்த பாதுகாப்புடனும் செய்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் இந்த விஷயத்தில் தனது இறுதி முடிவு என்னவாக இருக்கும் என்பதை இந்தியா இன்னும் முறைப்படி தெரிவிக்கவில்லை.

இதற்கிடையில் ஷேக் ஹசீனாவின் தூதரக பாஸ்போர்ட்டை வங்கதேச அரசு கடந்த வாரம் ரத்து செய்தது. இதனால் அவர் இப்போது இந்தியாவில் தங்கியிருப்பதற்கு சட்ட அடிப்படை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போதைய பின்னணியில் இந்திய அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்களுடன் இது குறித்து பிபிசி பேசியது. ஷேக் ஹசீனா விவகாரத்தில் தற்போது இந்தியாவிற்கு மூன்று மாற்று வழிகள் அதாவது பாதைகள் திறந்திருப்பதாக அந்த உரையாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com