வங்கதேசத்தை ஆதரிக்கும் பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பையில் பங்கேற்காமல் விலகுமா?

Share

வங்கதேசத்துக்கு ஆதரவளிக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்குமா?

பட மூலாதாரம், Getty Images

அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவில் விளையாட வங்கதேசம் மறுத்ததைத் தொடர்ந்து, அந்த அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்தின் பங்கேற்கும் என்பதை ஐசிசி சனிக்கிழமை (ஜனவரி 24) உறுதிப்படுத்தியது .

வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணி ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடும் என்று ஐசிசி தனது சமூக வலைத்தளப் பதிவில் தெரிவித்துள்ளது. இதன் மூலம், வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்தை ஐசிசி தனது போட்டி அட்டவணையில் சேர்த்துள்ளது.

மறுபுறம், வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆதரவு தெரிவித்துள்ளதுடன், பாகிஸ்தான் அணி டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து அரசே முடிவெடுக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்தியாவுடனான பதற்றம் அதிகரித்து வருவதால் பாதுகாப்பு காரணங்களைக் குறிப்பிட்டு, இந்தியாவில் இருந்து தங்கள் போட்டிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று வங்கதேசம் ஐசிசியிடம் கோரிக்கை விடுத்திருந்தது. இந்தியாவுக்குப் பதிலாக, இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டிருந்தனர்.

டி20 உலகக் கோப்பை இந்தியா மற்றும் இலங்கையில் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தான் விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெறுகின்றன.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com