`லேசான காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் பரிந்துரைக்க வேண்டாம்!’ – மருத்துவர்களுக்கு ICMR அறிவுறுத்தல்| No antibiotic for mild fever – Indian Council of Medical Research warns

Share

லேசான காய்ச்சல் மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்றவற்றுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வது தவறானது. அதோடு நோயாளியை நேரடியாகப் பரிசோதித்தும், ஆய்வக பரிசோதனைகளை வைத்தும், நோயை உண்டாக்கிய கிருமிகளையும், என்ன நோய் என்பதையும்  கண்டறிந்து அதற்கேற்றாற்போல, ஆன்டிபயாடிக் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும். 

மிகவும் நோய்வாய்ப்பட்ட நபர்கள் மட்டுமே ஆன்டிபயாடிக் சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும். கடுமையான செப்சிஸ், செப்டிக் ஷாக், சமூக அளவில் பரவக்கூடிய நிமோனியா, வென்டிலேட்டர் சிகிச்சையில் இருக்கும் போது ஏற்பட்ட நிமோனியா போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் தரலாம்.

2021 ஜனவரி 1 முதல், டிசம்பர் 31 வரை எடுக்கப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பெரும்பான்மையான நோயாளிகளில் ஆன்டிபயோடிக் எவ்வித பலனையும் அளிக்கவில்லை. இவர்களிடத்தில், நோய்க் கிருமிகள் மருந்துகளுக்கு எதிரான எதிர்ப்புச் சக்தியை (Anti-microbial resistance) உருவாக்கிக் கொள்கின்றன. இதனால் நோய் குணமடைவது கடினமாகிறது. நோய் பரவும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. மருந்துகளின் முறையற்ற பயன்பாடு இதை துரிதப்படுத்தலாம்’’ எனக் குறிப்பிட்டுள்ளது. 

’குறிப்பிட்ட நோய்த்தொற்றுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்ளும்போது, அதைச் சீராக கடைப்பிடிக்க வேண்டும். சாதாரண காய்ச்சலுக்கெல்லாம் ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக் கொள்வது, சில நேரங்களில் நோய்க் கிருமிகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிவிடும். பின்பு தீவிர நோய்த் தொற்றுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டாலும், அவை வேலை செய்யாது’ என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆன்டிபயாடிக் மருந்துகளின் பயன்பாட்டில் மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் கவனமாக இருக்க வேண்டும்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com