லெபனான்: பேஜர், வாக்கி-டாக்கி வெடிப்புகள் ஹெஸ்பொலாவை எந்த அளவுக்கு பாதிக்கும்?

Share

லெபனான் வெடிப்பு: இஸ்ரேல் உளவுத்துறை வாக்கி-டாக்கி, பேஜர்களில் பொறி வைத்ததா?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, செவ்வாயன்று பேஜர்கள் வெடித்ததில் கொல்லப்பட்ட 12 பேரில் சிலரது இறுதிச் சடங்குகள் நேற்று நடந்தன. அந்த இறுதிச் சடங்குகளிலும் சில வாக்கி-டாக்கி வெடிப்புகள் நடந்தன

லெபனானில் பேஜர்கள் வெடிப்பு நடந்த அடுத்த நாளே நிகழ்ந்த வாக்கி டாக்கி வெடிப்புகளில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஹெஸ்பொலா ஆயுதக் குழுவால் பயன்படுத்தப்பட்ட வாக்கி-டாக்கிகள் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகள், பெக்கா பள்ளத்தாக்கு, தெற்கு லெபனான் போன்ற ஹெஸ்பொலா கோட்டைகளாகக் கருதப்படும் பகுதிகளில் வெடித்தன.

கடந்த செவ்வாய்க் கிழமையன்று ஹெஸ்பொலா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடித்து 12 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் சிலரின் இறுதிச் சடங்குகளிலும் சில வாக்கி டாக்கி வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹெஸ்பொலா குற்றம் சாட்டியது. ஆனால், இஸ்ரேல் அதுகுறித்துக் கருத்து தெரிவிக்கவில்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இந்தத் தாக்குதலுக்கு முன்னதாக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கால்லன்ட், “போர் ஒரு புதிய கட்டத்தை நோக்கி நகர்வதாக” அறிவித்தார். அப்போது, இஸ்ரேலிய ராணுவப் பிரிவு வடக்கே நிலைநிறுத்தப்பட்டது.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com