பெங்களூரில் ஒரு பெண் அதிகளவில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டதால் அவரது சிறுநீரின் நிறம் மாறிய சம்பவம் மருத்துவ வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய செய்தி ஒரு மருத்துவ இதழிலும் வெளியாகி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த சிறுநீரக மருத்துவர் பிரபு காஞ்சியிடம் பேசினோம்:
“இது பொதுவான பிரச்னைதான். லிப்ஸ்டிக் வாயின் வழியாக சிறுநீரகத்திற்குச் சென்றால் சிறுநீரில் இதுபோன்ற நிற மாற்றங்கள் ஏற்படும். லிப்ஸ்டிக் மட்டுமல்ல உணவில் சேர்க்கப்படும் நிறமிகளாலும் (Food Color) இது போன்று சிறுநீரின் நிறம் மாறலாம். அதிகளவில் லிப்ஸ்டிக் மற்றும் நிறமிகள் பயன்படுத்தும்போது அது சிறுநீரகத்துக்குச் சென்று இதுபோன்ற நிற மாற்றங்களை ஏற்படுத்தும்.