லாரா கண்டிப்பு – News18 Tamil

Share

இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு ஆகி விட்டோமே என்ற அலட்சியத்தினால் இருவரும் ஐபிஎல் தொடரில் அலட்சியமாக ஆடுகின்றனர் என்று கூறுப்படுவதையும் மறுப்பதற்கில்லை, தன்னை அணியில் எடுக்கவில்லை என்றவுடன் கொதித்தார் சூரியகுமார் யாதவ், இப்போது இடம் கிடைத்தவுடன் தன்னை வளர்த்து விட்ட அணியையே சரியாக ஆடாமல் கவிழ்க்கிறார். வெற்றி பெறும் அவா முடிந்து விட்டது, காரணம் உடனடியான குறிக்கோளான இந்திய அணிக்குத் தேர்வு ஆவது நிறைவேறி விட்டதே!

இலங்கைக்கு எதிராக 50 ரன்கள் எடுத்ததோடு சரி அதன் பிறகு ஐபிஎல் தொடரில் அவர் 3, 5, 8, 0 என்று சொதப்பி வருகிறார். இதற்கு முன்பு இதே தொடர் இந்தியாவில் நடந்த போதும் 16 மற்றும் 3 என்பதே அவரது ஸ்கோராக இருந்தது. இப்படி பார்ம் போகக் காரணம் இருக்க முடியாது, இந்திய அணித் தேர்வுதான் அவரது அலட்சியத்துக்குக் காரணமாக இருக்கலாம். அல்லது இந்தச் சரிவு தற்காலிகமானதாக இருக்கலாம்.

இந்நிலையில் மேற்கிந்திய லெஜண்ட் பிரையன் லாரா இவர்கள் இருவரது பார்ம் சரிவு பற்றி ஸ்டார் ஸ்போர்ட்சுக்குக் கூறும்போது, “இந்திய அணிக்குத் தேர்வாகி விட்டொம் என்பது கூட இருவரது பின்னடைவுக்குக் காரணமாக இருக்கலாம். நிறைய வீரர்கள் தங்கள் கடந்த கால பெருமைகளிலேயே திளைத்து வருகின்றனர். இந்திய அணியின் நினைவில் இருக்கின்றனர், அது மிகவும் முக்கியம் என்று கருதுகின்றனர்.

ஆனால் இங்குதான் உங்கள் வாழ்வாதாரம் இருக்கிறது. ஐபிஎல் கிரிக்கெட் தான் உங்களை வெளி உலகுக்குக் காட்டியுள்ளது. சூரியகுமாரைப் பாருங்கள், இஷான் கிஷனையும் பாருங்கள் அதே வேளையில் சவுரவ் திவாரியைப் பாருங்கள், சவுரவ் திவாரிக்கு அவர்களை விட அதிக ஆர்வம் இருப்பது போல் தெரிகிறது.

இஷான் கிஷனும், சூரியகுமார் யாதவும் தொழில்நேர்த்தியுடன் அணியை வெற்றி பெற செய்வதில் நாட்டம் செலுத்த வேண்டும். உலகக்கோப்பையை மறந்து விடுங்கள், இப்போதைக்கு மும்பை இந்தியன்ஸை மேலே கொண்டு வர வேண்டும் அப்படித்தான் நீங்கள் யோசிக்க வேண்டும்” என்கிறார் பிரையன் லாரா.

Also Read: அஸ்வின் – மோர்கன் இடையே என்ன பிரச்சனை?- மவுனம் கலைத்த   தினேஷ் கார்த்திக்

ஐபிஎல் (IPL 2021) செய்திகளை படிக்க இங்கே கிளிக் செய்க.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com