லலித் மோதி, சுஷ்மிதாவின் டேட்டிங் படம் வைரல் – என்ன சொன்னார் முன்னாள் காதலர்?

Share

லலித் மோதி சுஷ்மிதா சென்

பட மூலாதாரம், LALIT MODI

பாலிவுட்டின் புதிய ஜோடியாக பொதுவெளியில் அறியப்பட்டவர்கள் ஆகியிருக்கிறார்கள் முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் மற்றும் முன்னாள் ஐபிஎல் தலைவரும் தொழிலதிபருமான லலித் மோதி. இருவரும் டேட்டிங்கில் இருக்கும் தகவல், சுஷ்மிதா சென்னின் ரசிகர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி பாலிவுட் திரையுலகிலும் பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

சுஷ்மிதாவின் முன்னாள் காதலரான ரோஹ்மன் ஷாலும் இந்த விவகாரத்தில் எதிர்வினையாற்றியிருக்கிறார்.

சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை லலித் மோதி தமது சமூக ஊடக பக்கங்களில் வெளியிட்டபோதுதான் இந்த இருவருக்கும் இடையிலான காதல் வெளி உலகுக்கு தெரிய வந்திருக்கிறது.

இது குறித்து ரோஹ்மன் ஷால் கருத்து கூறும்போது, “அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும். காதல் அழகானது. சுஷ்மிதா ஒருவரைத் தேர்ந்தெடுத்திருந்தால், அந்த நபர் அதற்குத் தகுதியானவர் என்பது எனக்குத் தெரியும்,” என்று தெரிவித்துள்ளார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com