லடாக்: இந்தியா சீனா இடையில் எட்டப்பட்ட ஒப்பந்தம் என்ன மாற்றம் கொண்டுவரும்?

Share

லடாக் எல்.ஏ.சி, இந்தியா, சீனா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இந்தியாவும் சீனாவும் தீபாவளியின் போது எல்.ஏ.சி பகுதியில் இனிப்புகளை பரிமாறிக்கொண்டன

கிழக்கு லடாக்கில் உள்ள இந்தியா-சீனாவுக்கு இடையேயான நிர்ணயிக்கப்படாத எல்லைக்கோடு (Line of Actual Control – LAC, எல்.ஏ.சி) தொடர்பாக இந்தியா மற்றும் சீனா இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கைகளின்படி, இரண்டு ராணுவப் படைகளும் டெப்சாங் மற்றும் டெம்சோக் ஆகிய இரண்டு இடங்களுக்குத் திரும்பிவிட்டன. மேலும் இந்த மோதல் புள்ளிகளில் (confrontation points) ரோந்துப்பணி விரைவில் தொடங்கப்படும்.

ஏ.என்.ஐ செய்தி முகமை வெளியிட்ட செய்தியின்படி, வியாழன் அன்று (அக்டோபர் 29) இந்தியாவும் சீனாவும் தீபாவளியின் போது எல்.ஏ.சி பகுதியில் இனிப்புகளை பரிமாறிக் கொண்டன.

கொல்கத்தாவில் வணிகர்கள் மற்றும் தொழில்துறை வணிகர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவுக்கான சீனத் தூதர் சு ஃபெய்ஹாங், “சீனாவும் இந்தியாவும் உறவுகளின் புதிய கட்டத்திற்குள் நுழைகின்றன. இரு நாடுகளும் புதிய வளர்ச்சி வாய்ப்புகளை அனுபவிக்க உள்ளன,” என்று கூறினார்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com