லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி…

Share

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் லக்னோ அணிக்கு எதிராக இன்று ஆட்டத்தில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. மும்பை அணியில் டிம் டேவிட், கேமரூன் கிரீன் ஆகிய ஹிட்டர்கள் களத்தில் இருக்க கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை அற்புதமாக வீசிய மொஹ்சின் கான் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து லக்னோ அணியின் தொடக்க வீரர்களாக தீபக் ஹூடா மற்றும் குவின்டன் டி காக் களத்தில் இறங்கினர்.

தீபக் ஹூடா 5 ரன்கள் எடுத்திருந்தபோது பெரன்டாஃப் பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய பிரிரக் மன்காட் பெரன்டாஃப் வீசிய முதல் பந்திலேயே இஷான் கிஷனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறிது நேரம் தாக்குப் பிடித்த குவின்டன் டி காக் 16 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூஷ் சாவ்லாவின் சுழலில் விக்கெட்டை பறி கொடுத்தார். 42 பந்துகளில் 49 ரன்கள் எடுத்திருந்தபோது க்ருணல் பாண்ட்யா ரிட்டையர்ட் ஹர்ட் என்ற முறையில் வெளியேறினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஸ்டாய்னிஸ் 47 பந்துகளில் 8 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த லக்னோ அணி 177 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கினர்.

முதல் விக்கெட்டிற்கு கேப்டன் ரோஹித் சர்மாவும் இஷான் கிஷனும் 90 ரன்கள் சேர்த்து அற்புதமான தொடக்கத்தை கொடுத்தனர். ரோஹித் 37 ரன்னில் ஆட்டமிழக்க இஷான் கிஷன் 59 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 7 ரன்னில் வெளியேற நெஹல் வதேரா 16 ரன்கள் எடுத்தார். டிம் டேவிட் 3 சிக்சர்கள் அடித்து அணிக்கு நம்பிக்கை ஏற்படுத்தினார். கடைசி 2 ஓவரில் மும்பை அணியின் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்டபோது 19 ஆவது ஓவரில் 19 ரன்கள் எடுக்கப்பட்டன. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டபோது சிறப்பாக பந்துவீசிய மொஹ்சின் கான் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் லக்னோவிடம் மும்பை அணி 5ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com