லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகள்; 6 பேர் கைது
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமிகளை கடத்தியதாக அல்லது வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.